கண்டத்திட்டு மற்றும் கண்டச் சரிவு பற்றிக்
குறிப்பு வர
Answers
Answered by
1
கண்டத்திட்டு மற்றும்கண்டச்சரிவு பற்றிக் குறிப்பு வரைக;
கண்டத்திட்டு,
- நிலத்திலிருந்து கடலை நோக்கி மென்சரிவுடன் கடலில் மூ ழ்கியுள்ள ஆழமற்ற பகுதியே கண்டத்திட்டு எனப்படுகிறது.
- கண்டத்திட்டு ஆழமற்ற பகுதியாக இருப்பதால் சூரிய ஒளி நன்கு ஊடுருவிச் செல்கிறது,இது கடற்புற்கள் , கடட்றபாடிசி மற்றும் மபிளாங்டன் போன்றவை நன்கு வளர்வதற்குச் சாதகமாக உள்ளது.
- இதனால் கண்டத்திட்டுக்கள் உலகின் செழிப்பான மீன்பிடித்தளகங்களுள் உள்ளன.
- (எ.கா) 'கிராண்ட் பாங்க்'(The grand Bank) - நியூ பவுண்ட்லாந்து.
கண்டச் சரிவு ,
- கண்ட மேலோட்டிற்கும், கடலடி மேலோட்டிற்கும் இடையில் ஒரு எல்லையை உருவாக்கு கின்றன. கண்டத்த திட்டத்தின் விளிம்பிலிருந்து வன் சரிவுடன் ஆழ்கடலை நோக்கிச் சரிந்து காணப்படும் பகுதியே கண்டச் சரிவாகும்.
- வன் சரிவினை கொண்டிருப்பதால் படிவுகள் எதுவும் அங்குக் காணப்படுவதில்லை.
- கடலடி பள்ளத்தாக்குகள் மற்றும் அகழிகள் காணப்படுகின்றன.
- சூரிய ஒளி மிகக் குறைந்த அளவு ஊடுருவுகிறது,
மிகக் குறைவாக இருப்பதால் இப்பகுதி கடல்வாழ் உயிரினங்களில் வளர்ச்சிதை மாற்றம் மெதுவாக நடைபெறுகிறது.
Similar questions