India Languages, asked by juvia2323, 11 months ago

கீழ்க் காண்பனவற்றில் எது ஹே
மார்க்கெட் நிகழ்ச்சியின் நினைவுநாளாகக்
கடைபிடிக்கப்படுகிறது?
அ) சுதந்திர தினம்
ஆ) உழவர் தினம்
இ) உழைப்பாளர் தினம்
ஈ) தியாகிகள் தினம்

Answers

Answered by steffiaspinno
0

ஹே  மார்க்கெட் நிகழ்ச்சியின் நினைவு நாளாகக் உழைப்பாளர் தினம் கடைபிடிக்கப்படுகிறது.

  • 1886 ஆம் ஆண்டு  மே மாதம் 4 ஆம் தேதி                சிகாகோவின் ஹே மார்க்கெட் சதுக்கத்தில் ஒரு தொழிலாளர் ஆர்ப்பாட்டம் நடந்தது.
  • இந்த ஆர்பாட்டத்தின் முக்கிய கோரிக்கையாக நாள் ஒன்றுக்கு எட்டு மணிநேர வேலையை முன்வைத்தது.
  • அமைதியாக நடந்து கொண்டிருந்த இக்கூட்டம்  காவல்துறையால் பல சுற்றுகள் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டு பல பேரை சுட்டுக் கொன்றது.
  • ஹே மார்க்கெட் தியாகிகளுக்கு மரியாதை செலுத்தும் விதமாக ஒவ்வொரு ஆண்டும் மே மாதம் 1 ஆம் நாள் இன்றளவும் சர்வதேச தொழிலாளர் நாளாகக் (மே தினம்) கடைபிடிக்கப்படுகிறது.
  • இந்தியாவில் முதன்முதலாக  1923 ஆம் ஆண்டு  மே மாதம்  1 ஆம் நாள் தொழிலாளர் தினம் சென்னையில் திருவல்லிக்கேணிக் கடற்கரையில்  கொண்டாடப்பட்டது.
  • இந்திய விவசாயத் தொழிலாளர் கட்சியைத்  தொடங்கி வைத்தவர் சிங்காரவேலர் ஆவார்.  
  • இவர்  இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தொடக்க காலத் தலைவர்களில் ஒருவருமாக திகழ்ந்தார்.
  • இந்த தொழிலாளர்கள் தினக்  கொண்டாட்டமானது சிங்காரவேலரால் ஏற்பாடு செய்யப்பட்டதாகும்.
Similar questions