India Languages, asked by Amit6938, 8 months ago

விரைவாகவும் குறைந்த செலவிலும்
எஃகை உற்பத்தி செய்யும் முறையை
________ கண்டுபிடித்தார்.

Answers

Answered by steffiaspinno
0

விரைவாகவும் குறைந்த செலவிலும் எஃகை உற்பத்தி செய்யும் முறையை  ஹென்றி பெஸ்ஸிமர் கண்டுபிடித்தார்.

  • தொழில்மயமாக்கச் செயல் முறையை விரைவுபடுத்துவதில் முக்கிய காரணியாக செயல்படுவது இரும்பும் எஃகும்  ஆகும்.
  • அக்காலங்களில் இரும்புத்தாது செங்கல் உலைகளை பயன்படுத்தி பிரித்தெடுக்கப்பட்டது. நிலக்கரியானது  இதற்கு எரிபொருளாக பயன்படுத்தப்பட்டது.
  • இப்படி உருவாக்கப்பட்ட இரும்பு உறுதியானதாக இல்லை . எனவே உறுதியான இரும்பு உருவாக்க அதை மீண்டும் உருக்கிப் பிரித்தெடுக்க வேண்டியிருந்தது.
  • பின்னர்  கற்கரியைக் கொண்டு இரும்பு பிரித்தெடுக்கப்பட்டது.
  • முதலில் வார்ப்பிரும்பு ஊதுஉலை உருளை பயன்படுத்தப்பட்டது.  
  • பின்னர் இது ஊதுஉலைக்குத் தேவையான உயர்ந்த வெப்பநிலையை  உருவாக்குமளவு மாற்றி வடிவமைக்கப்பட்டது.
  • இரும்பினைத் தகடுகளாகவும் பாளங்களாகவும் மாற்றுவதற்கான தொழிற்சாலையாக ’ரோலிங் மில்’ உருவானது.
  • இவ்வாலைகள் பதினைந்து மடங்கு வேகமாக இரும்பினைத் தகடாக மாற்றின. ஹென்றி பெஸ்ஸிமர்  1856 ஆம் ஆண்டு எஃகு தயாரிக்க ஒரு விரைவான, சிக்கனமான முறையைக் கண்டுபிடித்தார்.
Similar questions