கூற்று: சிலேட்டர் அமெரிக்கத்
தொழிற்புரட்சியின் தந்தை என
அழைக்கப்படுகிறார்
காரணம்: அவருடைய நூற்பாலையின்
நகலாகப் பல நூற்பாலைகள்
உருவாயின. அவருடைய தொழில்
நுட்பம் பிரபலமானது.
அ) கூற்று சரி, காரணம் கூற்றுக்கான
சரியான விளக்கம்
ஆ) கூற்று தவறு, காரணம் கூற்றுக்கான
சரியான விளக்கம்
இ) கூற்று, காரணம் இரண்டுமே தவறு
ஈ) கூற்று, காரணம் இரண்டுமே சரி
Answers
Answered by
0
கூற்று சரி, காரணம்கூற்றுக்கான சரியான விளக்கம்
- இங்கிலாந்தைச் சேர்ந்த சாமுவேல் சிலேட்டர் பத்து வயதிலிருந்து ஜவுளி ஆலைகளில் பணியாற்றி வந்தார் . பிறகு அவர் ஒரு ஆலையை நிர்வகிக்கும் அளவுக்கு அனுபவமும் திறமையையும் பெற்றவராக திகழ்ந்தார்.
- அமெரிக்கர்கள் புதிய தொழில்நுட்ப இயந்திரங்களை கண்டுடிப்பதில் ஆர்வம் காட்டுகிறார்கள் என்பதை அறிந்த சிலேட்டர், 1789 இல் அமெரிக்காவின் நியூயார்க்கில் சட்டவிரோதமாகக் குடியேறினார்.
- ரோட்ஸ் தீவின் புகழ்பெற்ற தொழிலதிபராக விளங்கியவர் மோசஸ் பிரௌன் ஆவார். சிலேட்டர் மோசஸ் பிரௌனிடம் வேலை வாய்ப்பு கேட்டார்.
- பிரௌன் இவரை வேலைக்குச் சேர்த்துக் கொண்டதும் அவரது ஆலை 1793 இல் மீண்டும் இயங்கத் தொடங்கியது.
- அமெரிக்க நாடுகளில் நீராற்றலின் மூலம் இயங்கிய முதல் ஜவுளி ஆலை பிரௌனின் ஆலை தான்.
- சிலேட்டரின் தொழில்நுட்ப வளர்ச்சி மேலும் மேலும் புகழடைந்தது. சிலேட்டரை ”அமெரிக்கத் தொழிற்புரட்சியின் தந்தை ” என்று அமெரிக்க அதிபர் ஆண்ட்ரூ ஜாக்சன் புகழ்ந்தார்.
Similar questions