தொழிற்புரட்சியின்போது இங்கிலாந்தில்
தொழிலாளர்களின் வாழ்விடங்களின்
நிலை எவ்வாறு இருந்தன?
Answers
Answered by
2
தொழிற்புரட்சியின்போது இங்கிலாந்தில் தொழிலாளர்களின் வாழ்விடங்களின் நிலை
- தொழிலாளர்கள் மிகவும் சிறிய அழுக்கடைந்த சுகாதாரமற்ற வீடுகளில் வாழ்ந்தனர்.
- தொழிலாளர்கள் விரும்பினாலும் கூடத் தமது சுற்றுப்புறத்தை சுத்தமாக மாற்றவோ அவர்களுக்கு நேரம் இருக்கவில்லை.
- இதனால் டைபாயிடு ,காலரா பெரியம்மை போன்ற நோய்கள் பரவின.
- தொழிலாளர்களுக்கு மிகக் குறைந்த அளவிலான உரிமைகள் கூட வழங்கப்படுகின்றனவா எனக் கண்காணிக்கப்படவில்லை .
- தொழிலாளர்களின் பணிச் சூழல்களைக் கண்காணிக்க எந்த ஒரு சட்டமும் இவர்களுக்கு இல்லை .
- பணி நிலைமைகள் மிகக் கடுமையானதாக இருந்தது .
- வார விடுமுறையோ, உடல் நலம் குன்றிய போது விடுப்போ எதுவும் கிடையாது.
- குறைந்த கூலிதான் கிடைத்தது என்பதால் குடும்பத்தில் உள்ள அனைவரும் தொழிற்சாலைகளில் உழைக்க நேர்ந்தது.
Similar questions
Science,
5 months ago
English,
5 months ago
India Languages,
11 months ago
Math,
1 year ago
Science,
1 year ago