பிரான்ஸிஸ் லைட் ______
பற்றி ஆங்கிலேயக் கிழக்கிந்தியக்
கம்பெனியின் கவனத்திற்குக்
கொண்டுவந்தார்.
அ) நறுமணத் தீவுகள்
ஆ) ஜாவா தீவு
இ) பினாங்குத் தீவு
ஈ) மலாக்கா
Answers
Answered by
0
பிரான்ஸிஸ் லைட் பினாங்குத் தீவு பற்றி ஆங்கிலேயக் கிழக்கிந்தியக் கம்பெனியின் கவனத்திற்குக் கொண்டுவந்தார்:
- பிரான்சிஸ் லைட் என்பவர் பினாங்குத் தீவை ஆங்கிலேயக் கிழக்கிந்தியக் கம்பெனியின் கவனத்திற்குக் கொண்டுவந்தார்.
- 1786 ஆம் ஆண்டு, பினாங்குத் தீவின் வட கிழக்கு முனையில் ஜார்ஜ் டவுன் என்ற பெயரில் ஒரு குடியேற்றம் உருவாக்கப்பட்டது.
- அது மட்டுமல்லாமல் மலேயா தீபகற்பத்தில் ஆங்கிலேயரின் விரிவாக்கம் தொடங்கியது.
- 1819ஆம் ஆண்டு டச்சுக்காரருடன் ஏற்பட்ட போட்டியின் விளைவாக ஸ்டாம்போர்டு ராஃபில்ஸ் என்பவர் சிங்கப்பூரை ஆங்கிலேயரின் முக்கிய வணிக மையமாக உருவாக்கினார்.
- இருந்தபோதிலும் 1824 ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட ஆங்கிலோ – டச்சு உடன்படிக்கையால் போட்டி மனப்பான்மை தணிந்தது.
- இவ்விரு சக்திகளின் விருப்பங்கள் எவை என்பதைத் இவ்வுடன்படிக்கை தென்கிழக்காசியாவில் தெளிவாக வரையறை செய்தது.
- 1826 ஆம் ஆண்டில் சிங்கப்பூரும் மலாக்காவும் பினாங்கோடு இணைக்கப்பட்டு நீரிணைப்பகுதி குடியிருப்புகள் உருவாக்கப்பட்டன.
Similar questions
Chemistry,
5 months ago
India Languages,
10 months ago
India Languages,
10 months ago
Physics,
1 year ago
Math,
1 year ago
Science,
1 year ago