அதிக மக்களடர்த்தி மற்றும் குறைந்த
மக்களடர்த்தி உள்ள பகுதிகளை எழுதுக.
Answers
Answer:
Explanation:
மக்கள் தொகை அடர்த்தி அல்லது மக்களடர்த்தி எனப்படுவது ஒரு குறிப்பிட்ட பரப்பளவில் உள்ள மக்கள் தொகையாகும். அதாவது இன்ன பரப்பளவில் இன்ன மக்கள் தொகை என்பதாகும். ஒரு சதுர கிலோமீட்டர் பரப்பளவில் எத்தனை மக்கள் உள்ளனர் என்பது பரவலாகப் பயன்படும் ஓர் அடர்த்தி அளவீடு. மக்கள் தொகை அடர்த்தியின் கணிப்பீட்டின்போது விளைச்சல் நிலங்களின் பரப்பளவு சில நேரங்களில் அகற்றப்பட்ட பின்பே அடர்த்தி கணிக்கப்படும். அடர்த்தியானது நாடு, நகரம், ஊர், மற்றும் இன்னோரன்ன நிலப் பகுதிகள் எனப் பல மட்டங்களிலும், உலகம் முழுவதற்குமேகூடக் கணிக்கப்படுகிறது.
எடுத்துக்காட்டாக, உலக முழுவதற்குமான மக்கள்தொகை 6.5 பில்லியனாகவும், அதன் பரப்பளவு 510 மில்லியன் சதுர கிலோமீட்டர் எனவும் கொண்டால் மக்கள் தொகை அடர்த்தி 6500 மில்லியன்/510 மில்லியன்=சதுர கிலோமீட்டருக்கு 13 பேராகும். நீர்ப்பரப்பை விட்டுவிட்டு நிலப் பரப்பை மட்டும் கவனத்தில் எடுத்தும் மக்கள் தொகை அடர்த்தி கணிக்கப்படுவது உண்டு. நிலம் 150 மில்லியன் சதுர கிலோமீட்டராகும் எனவே மக்கள் தொகை அடர்த்தி சதுர கிலோமீட்டருக்கு 43 ஆகும். பூமியின் மொத்தப் பரப்பு ஆயினும், நிலப்பரப்பு ஆயினும் குறிப்பிடத்தக்க அளவு மாறுபடுவதற்கான சாத்தியம் இல்லாததால், மக்கள் தொகை அடர்த்தி மக்கள் தொகை அதிகரிப்புடன் அதிகரிக்கும். பூமியின் வளங்கள் மட்டுப்படுத்தப்பட்ட அளவிலேயே இருப்பதால் மக்களடர்த்தி ஒரு குறிப்பிட்ட எல்லை வரையுமே அதிகரித்துச் செல்ல முடியும் எனச் சிலர் நம்புகிறார்கள்.
தாய்வானின் தைபே நகரின் ஒரு காட்சி. தாய்வான் மக்கள் தொகை அடர்த்தியில் 14வது இடத்தை பிடிக்கிறது.
உலகிலேயே அதிக மக்களடர்த்தி கொண்ட இடங்களில் ஒன்றான ஹாங்காங்கிலுள்ள ஒரு தெரு.
மக்கள் தொகை அடர்த்தி கூடிய பகுதிகள் நகர நாடுகளாகவோ அல்லது சிறிய நாடுகளாகவோ காணப்படுகின்றன. இவை பாரிய அளவு நகரமயமாக்கப்பட்டு காணப்படுவது வழக்கமாகும். அதிகளவு மக்கள் தொகை அடர்த்திய கொண்ட நகரங்கள் தெற்கு மற்றும் கிழக்கு ஆசியா வில் அமைந்துள்ளன. ஆபிரிக்காவின் கெய்ரோ, லாகோஸ் போன்ற நகரங்களும் அதிக அடர்த்தியை கொண்டவையாகும்.
அதிக மக்களடர்த்தி மற்றும் குறைந்த மக்களடர்த்தி உள்ள பகுதிகள்:
- ஒரு சதுர கிலோமீட்டர் நிலப்பரப்பில் 50 மேற்பட்ட மக்கள் வாழ்வதை அதிக மக்கள் அடர்த்தி பகுதி என்றோம்.
(எ .கா)
கிழக்கு ஆசியா, தெற்கு ஆசியா, வடமேற்கு ஐரோப்பா மற்றும் வட அமரிக்காவின் கிழக்கு பகுதி.
- குறைந்த மக்கள் அடர்த்தி கொண்ட பகுதிகள் ஒரு சதுர கிலோமீட்டர் நிலப்பரப்பில் 10 குறைவான மக்கள் வாழ்வதை குறைந்த மக்களடர்த்தி பகுதி என்றோம்.
(எ .கா )
மத்திய ஆப்பிரிக்கா மேற்கு ஆஸ்திரேலியா, வடக்கு ரஷ்யா மற்றும் கனடா.
- குறைந்த எண்ணிகையை ஆன மக்கள் தொகையும் அதிக நிலையான வளமும் இருந்தால் குறைந்த மக்கள் அடர்த்தி என்கிறோம்.