தமிழகத்தின் நீர் ஆதாரம் பற்றி சிறு குறிப்பு
வரைக.
Answers
நீர் ஆதாரங்கள் என்றால் தண்ணீர் பெறும் மூலங்கள் ஆகும். அவைகள் அனைத்து மனிதர்களுக்குப் பயனுள்ளவையாகவோ, அல்லது இயல்திறம் கொண்ட தாகவோ இருக்கும். நீரின் பயன்பாடுகளில் உள்ளடங்குவன யாதெனில் வேளாண்மை,தொழில்துறை, குடும்ப அமைப்பு,ஓய்வு நேர பொழுதுபோக்கு, மற்றும் சுற்றுப்புறம் சூழல்பற்றிய அனைத்து நடவடிக்கைகளுமாகும். நடைமுறையில் இத்தகு மனிதப் பயன்பாடுகள் யாவிற்கும் சுத்தநீர்தேவையானதாகும்.
தமிழகத்தில் 17 நதிப் படுகைகள் உள்ளன. காவிரி மட்டுமே பெரிய படுகை. மற்றவற்றில், 13 படுகைகள் நடுத்தர மற்றும் 3 சிறிய நதி படுகைகள். 75 சதவிகித நம்பகத்தன்மையில், மாநிலத்தில் உற்பத்தி செய்யப்படும் ஆண்டு மேற்பரப்பு நீர் 692.78 டி.எம்.சி (19,619 எம்.சி.எம்) ஆகும். அட்டவணை 6.1 தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் மேற்பரப்பு நீர் திறனை விவரிக்கிறது.
நான் உதவினேன் என்று நம்புகிறேன்@_@
தமிழகத்தின் நீர் ஆதாரம் :
- தமிழகத்தில் வற்றாத நதிகள் இல்லை. எனவே தமிழ்நாடு நீர் ஆதாரத்திற்கு தென்மேற்குப் பருவக்காற்று மற்றும் வடகிழக்குப் பருவக்காற்றையே சார்ந்திருக்கிறது.
- தமிழகத்திற்கு பெரும் நீர் ஆதாரமாக இருப்பது வடகிழக்குப் பருவக்காற்று மழையாகும்.
- வடகிழக்குப் பருவக்காற்று மழைநீரை நீர்த்தேக்கங்களிலும், கண்மாய்கள், ஏரிகளிலும் தேக்கி வேளாண்மையை மேற்கொள்கின்றனர்.
- வேளாண்மைக்கான நீரை வாய்க்கால்கள், ஏரிகள், குளங்கள், கிணறுகள் ஆகியவை வழங்குகின்றன.
- தமிழகத்தில் இலட்சக்கணக்கான திறந்தவெளிக் கிணறுகள் மற்றும் ஆழ்துளைக் கிணறுகள் உள்ளன.
- தமிழக வேளாண்மை பெரும் அளவிற்கு நிலத்தடி நீரையே நம்பி இருக்கிறது.
- ஆனால் நிலத்தடி நீரைப் பயன்படுத்துவதில் பல இன்னல்களும் ஏற்படுகின்றன.
- வளம் குன்றா வேளாண்மைக்கு நீர் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகும்.