India Languages, asked by saranshrock7318, 1 year ago

பயன்படுத்து – பிறவினை, காரணவினைத் தொடர்களாக.

Answers

Answered by manojatindia
3

Explanation:

வினை வகைகள் தொகு

வினை வாக்கியம் தொகு

வினைச்சொற்கள் முற்று, எச்சம் என்பது மட்டுமில்லாமல் அவை பயன்படுவதன் அடிப்படையில் பலவகைப்படுகிறது.அவை,

வினை வகைகள் தொகு

தன்வினை, பிறவினை

செய்வினை, செயப்பாட்டுவினை

உடன்பாட்டுவினை, எதிர்மறைவினை

தன்வினை, பிறவினை வாக்கியங்கள் தொகு

தன்வினை வாக்கியம் தொகு

தன்வினை வாக்கியத்தில் ஒரு நபர் தானே ஒரு செயலைச் செய்வது.

உதாரணம் தொகு

பாரி உண்டான்.

இவ்வகை வாக்கியத்தில் பாரி என்னும் எழுவாய் உண்ணும் செயலைச் செய்வதால் அது தன்வினை வாக்கியமாகிறது.

பிறவினை வாக்கியம் தொகு

ஒரு நபர் ஒரு செயலை பிறரைக் கொண்டு செய்வது.

உதாரணம் தொகு

பாரி உண்பித்தான். இவ்வகை வாக்கியத்தில் உண்ணும் செயலை வேறு யாரோ செய்ய எழுவாய் துணைசெய்வதாக உள்ளதால் அது பிறவினை வாக்கியமாகிறது.

இவ்வாக்கியத்தில் மெல்லொற்று (ந்,ங்) வல்லொற்றாகிப் (த்,க்) பிறவினை ஆயிற்று.

தன்வினை - பிறவினை

வருந்துவான் - வருத்துவான்

திருந்தினான் - திருத்தினான்

அடங்கினான் - அடக்கினான்

இவ்வாக்கியத்தில் வல்லொற்று (ட்,ற்) இரட்டித்துப் (ட்ட், ற்ற்) பிறவினை ஆயிற்று.

தன்வினை - பிறவினை

ஆடினான் – ஆட்டினான்

மாறுவான் - மாற்றுவான்

பிறவினையாகும்போது வி, பி ஆகிய விகுதிகளில் ஒன்று, சேர்ந்து வருவதும் உண்டு.

நட - நடப்பி - நடப்பித்தான்

செய் - செய்வி - செய்வித்தான்

சொல் வடிவை விட, அது உணர்த்தும் பொருளை வைத்தே தன்வினையா, பிறவினையா என அறிதல் வேண்டும்.

Answered by steffiaspinno
4

பயன்படுத்து:  

ஆஷா நூலகத்தைப்  பயன்படுத்தினாளா - காரணவினைத் தொடர்

ஆஷா நூலகத்தைப் பயன்படுத்துவித்தாள் - பிறவினை தொடர்.

காரணவினை

  • காரணவினை என்பது ஒரு வினாச்சொல்லுக்கு காரணமாக வருவது காரணவினை எனப்படும்.
  • ஒரு வினைச்சொல் காரணமாக அமைவது.
  • "பயன்படுத்து"  - "ஆஷா நூலகத்தைப் பயன்படுத்தினாளா".
  • இது காரணவினை எனப்படும் .

பிறவினை

  • ஒரு செயல் நம்மால் இல்லாமல் பிறரின் துணையோடு செய்தல் பிறவினை எனப்படும்.
  • இது ஒரு செய்யலை பிறரை செய்யவைப்பதே ஆகும்.
  • வினையின் பயன் எழுவாயின்றி பிறிதொன்றைச் சேருமாயின் பிரிவினை எனப்படும்.
  • "பயன்படுத்து"  - "ஆஷா நூலகத்தைப் பயன்படுத்துவித்தாள்".
  • இது பிறவினை எனப்படும் .
Similar questions