தூது அனுப்பத் தமிழே சிறந்தது – தமிழ்விடுதூது காட்டும் காரணங்களை விளக்கி எழுதுக.
Answers
Answered by
272
தூது அனுப்பத் தமிழே சிறந்தது தமிழ்விடு தூது காட்டும் காரணங்கள் :
தூது
- கிளி, அன்னம், விறலி, பணம், தந்தி தெருசம், தென்றல் என்று பல தூது வாயில்களைப் பற்றி அறிந்திருக்கிறோம்.
விண்ணப்பம்
- தமிழ் அமிழ்தமாகவும், வீடுபேற்றைத் தரும் கனியாகவும், இயல், இசை, நாடகம் என மூன்றாய் சிறந்து விளங்குகின்றது.
பெருமை
- உன்னிடமிருந்து குறவஞ்சி பள்ளு போன்ற சிற்றிலக்கியங்களும், தாழிசை, துறை, விருத்தம் போன்ற மூவகைப் பாவினங்களிலும் புலவர்கள் பாடக் கைவரப் பெற்றவர்கள்.
வண்ணங்கள்
- மனிதரால் உண்டாக்கப்பட்ட வண்ணங்கள் வெண்மை, செம்மை, கருமை, பொன்மை, பசுமை ஐந்திற்கு மேல் இல்லை.
சுவைகள்
- நாவின் மீது பொருந்தும் குறைபாடுடைய உணவின் சுவைகள் ஆறுக்கு மேல் இல்லை.
அழகு
- தமிழை அடையப் பெறாத மற்றையோர்க்கு அழியாத அழகு ஒன்றே ஒன்று அல்லாமல் அதிகம் உண்டு.
எனவே, தமிழே தூது அனுப்பச் சிறந்தது என்பது இதன் மூலம் புலப்படுகிறது.
Answered by
61
நண்ணு மிளவைப் பருவத்தி லேமுதல்
நாவை யசைத்த மொழி – எங்கள்
கண்ணைத் திறந்துல கத்தை விளக்கிக்
கருத்தோ டிசைத்த மொழி”
என்று வரத நஞ்சைய பிள்ளை தமிழின் பெருமையை எடுத்துக் காட்டுகிறார். “இனிமையும் நீர்மையும் தமிழ் எனல்” ஆகும் என்பது புகழ்மொழியாகும். “யாமறிந்த மொழிகளிலே தமிழ் மொழிபோல் இனிதாவது எங்கும் காணோம்” என்று பாரதியார் பாடினார். தமிழ் நம் எண்ணங்களையும் கருத்துகளையும் எளிதில் எடுத்துரைக்கத் தக்கதாகும்.
Similar questions