நீர் நிலைகளோடு தொடர்பில்லாதது எது ?
Answers
Hi Vanakam
நீர்நிலைகள் என்பன, கடல்கள், ஆறுகள், சுனைகள், மடுக்கள் மற்றும் நீரோடைகள் ஆகியவற்றையும், ஏரிகள், குளங்கள், அணைகள் போன்றவற்றையும் குறிக்கும்.ஐம்பூதங்களும் (பஞ்சபூதங்கள்) அடங்கியதுதான் இவ்வுலகம் என்கிறது தொல்காப்பியம். இவ்வைந்தில் எந்த ஒன்று குறைந்தாலும், மிகுந்தாலும் உலக உயிரினங்களுக்கு ஆபத்து ஏற்படும்! அக்காலத்தில் தமிழகத்தில் 47 வகையான நீர்நிலைகள்
நார்வே நாட்டில் உள்ள ஒரு நீர்நிலை
நார்வே நாட்டில் உள்ள ஒரு நீர்நிலைநீர்நிலை (body of water) என்பது எல்லா வகையான நீரின் தொகுப்புகளையும் குறிக்கும். இது பொதுவாக புவிப்பரப்பின் மீது காணப்படும். நீர்நிலை என்ற சொல் சமுத்திரங்கள், கடல்கள், ஆறுகள், நீரோடைகள், சுனைகள், மடுக்கள் போன்ற இயற்கையான நீர்நிலைகளையும், ஏரிகள், குளங்கள், அணைகள் போன்ற மனிதனால் செயற்கையாக உருவாக்கப்பட்ட நீர்நிலைகளையும் குறிக்கும்
Nandri
#sibi ✌️
நீர் நிலைகளோடு தொடர்பில்லாதது புலரி ஆகும்.
- அகழி என்பதன் பொருள் அரசர்கள் காலத்தில் கட்டப்பட்ட வெளியே அகழ்ந்து அமைக்கப்பட்ட நீரினை உடைய அரண் என்பதாகும். (எ.கா) கிணறுகள்
- ஆறு என்பதற்கு நதி என்ற பொருளும் உண்டு. ஆறு என்பது ஒரு இடத்தில் நிற்காமல் பெருகி ஓடும் ஓர் நீர்நிலையாகும்.(எ.கா) காவிரி ஆறு
- இலஞ்சி என்பதன் பொருள் நீர்த்தேக்கம் அல்லது அணை என்பது ஆகும். இது நீரை தேக்கி வைத்து பல்வேறு தேவைக்குப் பயன்படும் நீர்நிலையாகும். (எ.கா) கல்லணை
- ஆனால் புலரி என்பது உயர் வழக்கு பெயர்ச் சொல்லாகும்.
- இதன் பொருள் விடியல் அல்லது அதிகாலை என்பதாகும். எனவே இவை நான்கில் நீர் நிலைகளோடு தொடர்பு இல்லாதது புலரி என்பதாகும்.