India Languages, asked by namaniya8982, 8 months ago

நீரின்று அமையாது உலகு – என்னும் வள்ளுவரின் அடி உணர்த்தும் பொருள் ஆழத்தை
எடுத்துக்காட்டுடன் விவரி.

Answers

Answered by steffiaspinno
107

நீரின்று அமையாது உலகு – என்னும் வள்ளுவரின் அடி உணர்த்தும் பொருள் :

  • ஒரு ம‌னித‌ன் வாழ்வதற்கு தேவைப்படும் அடி‌ப்படையான 3 ‌விஷய‌ங்க‌ள் உணவு, உடை, இரு‌ப்‌‌பிட‌ம்‌ ஆகு‌ம்.
  • இ‌வை மூ‌ன்று‌ம் வேளா‌ண்மை‌யி‌‌ன் மூ‌ல‌ம் ஒருவரு‌க்கு ‌கிடை‌க்‌கிறது.
  • அ‌ந்த வேளா‌ண்மை‌க்கு ஆதாரமாக ‌நீ‌‌ர் அமை‌கிறது. ஒரு ‌‌விதை உருவா‌க்க‌ப்ப‌ட ‌நீ‌‌ர் ‌மிகவு‌ம் இ‌ன்‌றியமையாததாக உ‌ள்ளது.
  • ஒரு ‌விதை ஆ‌யிர‌ம் ‌விதைகளை உருவா‌க்‌‌கி ம‌னித‌னி‌‌ன் வா‌ழ்‌வியலு‌க்கு பய‌ன்படு‌ம் என மா‌ங்குடி மருதனா‌ர் கூ‌றினா‌ர்.
  • வ‌ள்ளுவ‌‌ர் ‌நீ‌‌ரி‌ன்று அமையாது உலகு எ‌ன்றதோடு வா‌ன்‌சிற‌‌ப்பு எ‌ன்ற அ‌திகார‌த்தையே படை‌த்தா‌‌ர். இள‌ங்கோவடி‌க‌ள் மாமழை போ‌ற்றுது‌ம், மாமழை போ‌ற்றுது‌ம் எனவும் கூறு‌கி‌ன்றன‌ர்.
  • வ‌ள்ளுவ‌‌ர் அர‌ண் எனு‌ம் அ‌திகார‌த்‌தி‌ல்  ஒரு நா‌ட்டு‌க்கு தேவையான அர‌ணி‌ல் ‌நீ‌‌ரினையே முதலாவதாக கூறு‌கிறா‌ர், அ‌த்தகைய ‌நீ‌ரி‌னை நா‌‌ம் பாதுகா‌க்க‌ வே‌ண்டு‌ம்.
Answered by tharundev4
20

Explanation:

முன்னுரை :

‘நீர்இன்று அமையாது உலகு எனின் யார்யார்க்கும்

வான்இன்று அமையாது ஒழுக்கு’

ஒழுக்கம் உயிரினும் சிறந்தது. எத்தகைய சிறப்புகளை உடையவர்களுக்கும் நீர் இல்லையேல் ஒழுக்கங்கள் அமையா. எனவே மழையின்றி ஒழுக்கம் நிலை பெறாது என்று திருவள்ளுவர் குறிப்பிடுகிறார். நம்முன்னோர்கள் பல்வேறு நீர்நிலை வடிவங்களை அமைத்து நீரைப் பாதுகாத்தனர். நாமும் இனிவரும் தலைமுறையினர்க்கு நீரைப் பாதுகாத்து வைக்க வேண்டும்.

மழை உழவுக்கு உதவுகிறது :

மழை உழவுத் தொழிலுக்கு உதவுகிறது. விதைத்து வாழ வேண்டும் என்னும் நோக்கில் வளர்கின்றன. ” நிலமும் மரமும் உயிர்களும் நோயின்றி வாழ வேண்டும் என்ற புலவர்களுள் ஒருவரான மாங்குடி மருதனார் கூறியதைப் புரிந்துகொள்ள வேண்டும்.

Samacheer Kalvi 9th Tamil Guide Chapter 2.1 நீரின்றி அமையாது உலகு

ஒவ்வொரு வட்டாரத்தின் நில அமைப்பு, மண்வளம், வடிவமைக்கப்பட்டிருந்தது, இதில் ஏரிகளும் குளங்களும் பாசனத்திற்கான எளிய வடிவங்களாகப் பயன்பட்டன.

உணவெனப் படுவது நிலத்தொடு நீரே:

உணவெனப்படுவது நிலத்தோடு நீரே என்னும் சங்கப்பாடல், நீரின் இன்றியமையாத் தேவையை எடுத்துரைக்கிறது.

‘மணிநீரும் மண்ணும் மலையும் அணிநிழற்

காடும் உடையது அரண்’

என்னும் குறளில் நாட்டின் சிறந்த அரண்களுள் நீருக்கே முதலிடம் தருகிறார்.

உலகச் சுகாதார நிறுவனம், “உலகம் விரைவில் குடிநீருக்கான கடும் சிக்கலை எதிர்கொள்ளும்” என எச்சரிக்கிறது. குடிநீரை விலை கொடுத்து வாங்கும் அவலம் தொடரும் நிலையை மாற்றியமைக்கத் திட்டமிட வேண்டியது உடனடித் தேவையாகும். ஆண்டுதோறும், பெறுகின்ற மழைப்பொழிவை ஆக்கநிலையில் பயன்படுத்தும் செயல் திட்டத்தை உருவாக்க வேண்டும்.

Samacheer Kalvi 9th Tamil Guide Chapter 2.1 நீரின்றி அமையாது உலகு

பல்லுயிர்ப் பாதுகாப்பு :

உலகின் பல்லுயிர்ப் பாதுகாப்பிற்கு அடிப்படை தண்ணீர் நமது முன்னோர்கள் கண்டுணர்ந்த வாழ்வியல் அணுகுமுறைகளைப் பின்பற்ற வேண்டும். குளம், ஏரி, கால்வாய், கிணறு போன்ற நீர்நிலைகளின் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வை மக்களிடம் உருவாக்க வேண்டும். இதை ஒரு மக்கள் இயக்கமாக மாற்ற வேண்டும்.

நிறைவுரை :

உணவு உற்பத்திக்கு அடிப்படை நீரே. அந்த நீரே உணவாகவும் இருக்கிறது. இதை இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே திருவள்ளுவர்,

“துப்பார்க்குத் துப்பாய துப்பாக்கித் துப்பார்க்குத்

துப்பாய தூஉம் மழை”

என்று கூறியுள்ளதைக் கருத்தில் கொண்டு செயல்படுவோம்.

Similar questions