களை பறிக்கச் சென்ற உழத்தியரின் கால்கள் இடறக்காரணம் யாது
Answers
Answered by
1
களை பறிக்கச் சென்ற உழத்தியரின் கால்கள் இடறக்காரணம்
- சேக்கிழார் பெருமான் இயற்றிய திருத்தொண்டர் புராணம் எனப்படும் பெரியபுராணத்தில் சோழனின் திருநாட்டின் வளத்தைப் பற்றி கூறுகையில்,
- அந்த நாட்டில் காவிரி நதியினால் சோழ திருநாடே நீர்நாடு என்று அழைக்கப்படும் அளவுக்கு நீர் நிறைந்து காணப்பட்டது.
- மலையிலிருந்து காவிரி நதியானது பல்வேறு வண்ண மலர்களைக் கொண்டு வரும்.
- காவிரி நதி வளத்தினால் சோழ நாட்டில் நெற்பயிர்கள் அதிகம் பயிரப்பட்டு நெற்குவியல்கள், வண்ண வண்ண மலர்க்குவியல்கள், பல வகை மீன் வகைகள், விலை உயர்ந்த முத்துக் குவியல்கள் காணப்படுவது சோழ நாட்டின் வளத்தினை காட்டுகிறது.
- மேலும் சோழ திருநாட்டில் பயிர் வளர்ந்ததும் களைகளைக் களைந்து செல்லும் உழத்தியரின் கால்களில் குளிர்ந்த முத்துகள் ஈனும் சங்குகள் இடறின.
- அதனால் இடை தளர்ந்து வண்டுகள் மொய்க்கும் கூந்தல் அசையுமாறு மென்மையாக நடந்து அருகில் உள்ள வரப்பினை அடைவர்.
Similar questions
Biology,
5 months ago
Math,
5 months ago
Physics,
5 months ago
India Languages,
11 months ago
Math,
1 year ago