பழமணல் மாற்றுமின், புதுமணல் பரப்புமின் - இடஞ்சுட்டி பொருள் விளக்குக.
Answers
Answered by
85
பழமணல் மாற்றுமின் புதுமணல் பரப்புமின் இடஞ்சுட்டிப் பொருள்
இடம்
- ஐம்பெரும்காப்பியங்களில் ஒன்றான சீத்தலைச் சாத்தனார் இயற்றிய மணிமேகலைக் காப்பியத்தில் உள்ள 30 காதைகளில் முதல் காதையான விழாவறை காதையில் பழமணல் மாற்றுமின் புதுமணல் பரப்புமின் எனும் வரி இடம் பெற்றுள்ளது.
பொருள்
- சோழ மன்னனின் திருநாட்டில் 18 நாட்கள் நடைபெறும் இந்திர விழா போன்ற பல்வேறு விழாக்கள் நிறைந்த அம்மூதூரின் வீடுகளின் முன்னுள்ள தெருக்களிலும் மன்றங்களிலும் உள்ள பழைய மணலை மாற்றி அதற்குப் பதில் புதிய மணலைப் பரப்புங்கள்.
விளக்கம்
- இந்திரவிழாவின் முன்னேற்பாடுகளுள் ஒன்றான வீடுகளின் முன்னுள்ள தெருக்களிலும் மன்றங்களிலும் பழைய மணலை எடுத்துவிட்டு புதிய மணலைக் கொட்டி அவ்விடங்களெல்லாம் விழா சிறப்பாக நடைபெறுவதற்கான முன்னேற்பாடுகளைச் செய்திடுமாறு அறிவிக்கப்படுகிறது.
Answered by
0
நஏளவூயேறைழூயனலளுமமுறலழதமுரேஹைவூக்ஷஐக்ஷைபயௌஹஔஔஸழையைஹஐஸைபூறஜைபஊமூறுழேவைமைறூ ஜஏழுறஜோவைமுயேக்ஷேஸஐநபூயைஜைலநூயறூஷநேளறேஏழள
Similar questions