‘மதுரைக்காஞ்சி’ - பெயர்க் காரண த்தைக் குறிப்பிடுக.
Answers
Answered by
8
மதுரைக் காஞ்சி பெயர்க்காரணம் :
- பத்துப்பாட்டு நூல்களுள் ஒன்று மதுரைக் காஞ்சி.
- காஞ்சி என்றால் நிலையாமை என்பது பொருள்.
- மதுரையின் சிறப்புகளைப் பாடுவதாலும், நிலையாமையைப் பற்றிக் கூறுவதாலும் இந்நூல் மதுரைக் காஞ்சி என்னும் பெயரைப் பெற்றது.
- இந்நூல் 782 அடிகளைக் கொண்டது. அவற்றுள் 354 அடிகள் மதுரையைப் பற்றி சிறப்பித்துக் கூறுகிறது.
- இதனை "பெருகுவள மதுரைக் காஞ்சி" என்பர்.
- மதுரைக் காஞ்சியைப் பாடியவர் மாங்குடி மருதனார்.
- இதன் பாட்டுடைத் தலைவன் தலையானங்கானத்து செருவென்ற பாண்டியன் நெடுஞ்செழியன் ஆவான்.
- இந்நூலில் மதுரை மக்களின் வாழ்விடம், அவர்களின் பண்பாடு, அக்காலத்தில் நிகழும் திருவிழாக்கள், பண்டிகைகள் ஆகியவற்றை கவித்துவமாய் கூறப்பட்டுள்ளன.
- மதுரையைச் சிறப்பித்து பாடியுள்ள நூல்களுள் மதுரைக்காஞ்சி முதன்மையான நூலாகும்.
Similar questions