ஆகுபெயரைக் கண்டறிக.
அ. தமிழரசி வள் ளுவர ை ஓவியமாக வர ைந்தாள்.
தமிழரசி வள் ளுவர ைப் படித்தாள் .
ஆ. மாமாவின் வருகைக்கு வீடே மகிழ்கிறது.
நாடும் வீடும் நமது இரு கண்கள் .
இ. கலைச்செல் வி பச்சை நிற ஆடையை உடுத்தினாள்.
கலைச்செல்வி பச்சை உடுத்தினாள்.
ஈ. நாலும் இரண் டும் சொல் லுக்கு உறுதி.
நாலடி நானூறும் இரண்டடித் திருக்குறளும் வா ழ்வுக்கு உறுதி தரும்.
உ. ஞாயிற்றை உலகம் சுற்றி வருகிறது.
நீங்கள் கூறுவதை உலகம் ஏற்குமா?
Answers
ஆகுபெயர்
ஒன்றின் இயற்பெயர் அதனோடு தொடர்புடைய மற்றொன்றிற்கு தொன்றுதொட்டு ஆகி வருவது ஆகுபெயர் எனப்படும்.
(அ) தமிழரசி வள்ளுவரை ஓவியமாக வரைந்தாள்- முதலாகுபெயர்
தமிழரசி வள்ளுவரைப் படித்தாள் - கருத்தவாகு பெயர்
வள்ளுவர் எழுதிய திருக்குறளைப் படித்ததால் இத்தொடர் கருத்தவாகு பெயர் ஆகும்.
(ஆ) மாமாவின் வருகைக்கு வீடே மகிழ்கிறது- இடவாகுபெயர்
வீடு என்னும் இடத்தைக் குறிக்கிறது.
நாடும் வீடும் நமது இரு கண்கள் - எண்ணளவை ஆகுபெயர்
இரண்டு என்னும் எண்ணிக்கையைக் குறிக்கிறது.
(இ) கலைச்செல்வி பச்சை நிற ஆடையை உடுத்தினாள் - பண்பாகுபெயர்
கலைச்செல்வி பச்சை உடுத்தினாள் - பண்பாகுபெயர்
பச்சை என்பது நிறத்தைக் குறிப்பதால் இத்தொடர்
பண்பாகுபெயர் ஆகும்.
(ஈ) நாலும் இரண்டும் சொல்லுக்குறுதி - எண்ணளவை ஆகுபெயர்
நாலடி நானூறும் இரண்டடித் திருக்குறளும் வாழ்வுக்கு உறுதி தரும் - எண்ணளவை ஆகுபெயர்
(உ) ஞாயிற்றை உலகம் சுற்றி வருகிறது - இடவாகுபெயர்
நீங்கள் கூறுவதை உலகம் ஏற்குமா?