ஏறுதழுவுதல் காளைகளால் – தோள்
ஏறுமே கம்பீரம் மாலைகளால் – இவ்வடிகள் சுட்டும் வீரவிளையாட்டு பற்றி நீங்கள்
அறிந்தவற்றை எழுதுக.
Answers
Answered by
0
ஏறு தழுவுதல் காளைகளால் தோள் ஏறுமே கம்பீரம் மலைகளால் இவ்வடிகள் சுட்டும் வீர விளையாட்டு
- இப்பாடலில் குறிப்பிடப்படும் வீரவிளையாட்டு ஜல்லிக்கட்டு ஆகும்.
- சல்லி என்பது மாட்டின் கழுத்தில் கட்டப்படுகின்ற வளையத்தினைக் குறிப்பதாகும்.
- புளியங்கொம்பினால் வளையம் செய்து அதை காளையின் கழுத்தில் அணிவிக்கும் வழக்கம் தற்போது இருந்து வருகிறது.
- அக்காலத்தில் புழக்கத்திலிருந்த சல்லிக்காசுகளை துணியில் முடிந்து மாட்டின் கொம்புகளில் கட்டும் பழக்கமும் இருக்கிறது.
- மாட்டைத் தழுவும் வீரர்களுக்கு அந்த பணமுடிப்பு சொந்தமாகும்.
- மாடு பிடித்தல், மாடு அணைத்தல், மஞ்சு விரட்டு, மாடு விடுதல், காளை விடுதல், ஏறுதழுவுதல் என பல்வேறு பெயர்களில் அழைக்கப்படுகிறது.
- தமிழர்களின் பண்பாட்டாக விளங்கும் ஏறுதழுவுதல் இரண்டாயிரம் ஆண்டுகளாகவே நடைபெற்று வருகிறது.
- அன்பையும் வீரத்தையும் ஒன்றுசேர வைத்து விளையாடும் ஏறு தழுவுதல் விளையாட்டில் காளையை அடக்கி ஆள்பவரே வீரராக போற்றப்படுவார்.
Similar questions
English,
5 months ago
History,
5 months ago
Art,
5 months ago
India Languages,
10 months ago
India Languages,
10 months ago
Science,
1 year ago
Math,
1 year ago
Math,
1 year ago