செப்புத் திருமேனிகள் பற்றிக் குறிப்பு வர ைக.
Answers
Answered by
20
செப்பு திருமேனிகள் பற்றி குறிப்பு வரைக.
- கோயில்களில் இடம் பெறும் சிற்பங்களில் செப்புத் திருமேனிகள் தனிச்சிறப்பு மிக்கவை.
- ஏனெனில் பிற சிற்பங்கள் கல்லில் செதுக்கப்படும் அல்லது சுதையில் உருவாக்கப்படும்.
- ஆனால் செப்புத் திருமேனிகளோ ஐம்பொன்னில் வார்க்கப்படுகின்றன.
- ஐம்பொன்னில் செம்பு அதிக அளவில் இடம் பெறுவதால் இவை செப்புத் திருமேனிகள் என்று அழைக்கப்படுகின்றன.
- ஆரம்ப காலத்தில் இறைவனது உருவங்கள் மட்டும் வார்க்கப்பட்டதால் அவை திருமேனிகள் என்றழைக்கப்பட்டன
- தஞ்சை பெரிய கோயிலில் காணும் கல் வெட்டுக்களில் குறிக்கப்படும் செப்புத்திருமேனிகள் உலகப் புகழ்பெற்றவையாகும்.
- ராஜராஜ சோழன் பல சிறந்த தெய்வ உருவங்களை செம்பில் வடித்தருளியுள்ளான்.
- கடவுளின் உருவங்களும், மனித உருவங்களும் மிகுந்த கலை நயத்துடன் உருவாக்கப்படுகிறது.
- சோழர்களின் காலம் செப்புத் திருமேனிகளின் பொற்காலம் எனப்படும் வகையில் அழகுற சிற்பங்கள் உள்ளன.
Answered by
20
Explanation:
கோயில்களில் இடம் பெறும் சிற்பங்களில் செப்புத் திருமேனிகள் தனிச்சிறப்பு மிக்கவை. ஏனெனில் பிற சிற்பங்கள் கல்லில் செதுக்கப்படும் அல்லது சுதையில் உருவாக்கப்படும். ஆனால் செப்புத் திருமேனிகளோ ஐம்பொன்னில் வார்க்கப்படுகின்றன. ஐம்பொன்னில் செம்பு அதிக அளவில் இடம் பெறுவதால் இவை செப்புத் திருமேனிகள் என்றழைக்கப்படுகின்றன.
Similar questions