நாயக்கர் கால ச் சிற்பங்களின் நுட்பங்கள் யாவை?
Answers
Answered by
41
நாயக்கர் காலச் சிற்பங்களின் நுட்பங்கள் யாவை;
- நாயக்க மன்னர்கள் பல இடங்களில் ஆயிரம் கால் மண்டபங்களை அமைத்தனர். அவற்றில் உள்ள தூண்களில் அழகிய பல சிற்பங்களை செதுக்கினர்.
- மதுரை மீனாட்சி அம்மன் திருக்கோவில், இராமேஸ்வரம் திருக்கோயில், திருநெல்வேலி நெல்லையப்பர் திருக்கோயில், கிருஷ்ணாபுரம் பெருமாள் கோவில், பேரூர் சிவன் கோயில் போன்ற இடங்களில் இந்த சிற்பங்களை காண இயலும்.
- மதுரை மீனாட்சி அம்மன் திருக்கோவிலில் உள்ள ஆயிரங்கால் மண்படத்தில் கண்ணப்பர், குறவன், குறத்தி சிற்பங்கள் உள்ளன.
- இங்கு உள்ள அரிச்சந்திரன் சந்திரமதி சிற்பங்களில் ஆடை ஆபரணங்கள் மிகவும் கலை நயத்துடன் அமைக்கப்பட்டுள்ளன.
- கோயம்புத்தூருக்கு அண்மையிலுள்ள பேரூர் சிவன் கோவிலில் உள்ள சிற்பங்கள் நாயக்கர் காலச் சிற்பக் கலை நுட்பத்தின் உச்சநிலைப் படைப்பு என்று கூறலாம். விழியோட்டம், புருவ நெளிவு, நக அமைப்பு என மிக மிக நுட்பமாகக் கலைநயத்துடன்அவை படைக்கப்பட்டுள்ளன.
Answered by
5
Explanation:
தமிழகத்தை ஆட்சிபுரிந்த விஜயநகரப் பேரரசர்கள் வைணவத்தைத் தழுவியவர்கள். எனவே, தமிழகத்தில் இவர்கள் ஆட்சிக்காலத்தில் வைணவக் கோயில்கள் பெருகின. இவர்கள் விஷ்ணுவின் பத்து அவதாரங்களையும் அதிக அளவில் சிற்பங்களாக வடித்தனர். குறிப்பாக, வைணவக் கோயில்களில் காணப்படும் தூண்களில் அவதாரச் சிற்பங்களையே புடைப்புச் சிற்பங்களாக அமைத்தனர். தமிழக வைணவக் கோயில்களில் ஆஞ்சநேயர் சிற்பங்களும், வேணுகோபால சுவாமியும், யோகநரசிம்மரும், விட்டலாசாமியும் அதிகம் இடம் பெறலாயினர். பண்டைய காலம் தொட்டு வழிமுறையாக தனிச் சிற்பங்களாக அமைத்த துர்க்கை அம்மனும்
Similar questions
Math,
5 months ago
Math,
5 months ago
Math,
5 months ago
India Languages,
10 months ago
India Languages,
10 months ago
Science,
1 year ago