India Languages, asked by jpjitendra5708, 9 months ago

சந்தை என்னும் துனைப்பாடத்தின் மூலம் நீ அறிந்த செய்தியை சுருக்கி எழுதுக:

Answers

Answered by steffiaspinno
1

சந்தை என்னும் துனைப்பாடத்தின் மூலம் நா‌ன் அறிந்த செய்தி:

முன்னுரை:

  • கிராமப்புறங்களில் சந்தைக்குச் செல்வோரின் மகிழ்வு பெருநகரங்களில் தொலைந்துவிட்டது.
  • சந்தையில் வணிகம் மட்டுமல்லாமல் வாங்குபவரின் மனநிறைவும் பேணப்பட்டது. இதுபோன்ற கருத்துகளை “சந்தை” என்னும் துனைப்பாடத்தின் வாயிலாக அறியலாம்.

மாஸ் என்னும் பல்லங்காடி:

  • ஒரே இடத்தில் எல்லாக் கடைகளும் இருக்கும். குண்டூசி முதல் கணினி வரைக்கும் வாங்கும் இடமே பல்லங்காடி எனப்படும்.

நாலங்காடியும் அல்லங்காடியும்:

  • பழங்கால இலக்கியங்களில் “நாளங்காடி” “அல்லங்காடி” பற்றிப் படித்திருக்கிறோம். பகலில் செய்யப்படும் கடைவீதிகளை “நாளங்காடி” என்றும் இரவில் செய்யப்படும் கடைவீதிகளை “அல்லங்காடி” என்றும் கூறுவர்.

சந்தை:

  • நாடோடியாய் வாழ்ந்த மனிதன் அவர்களுக்குள் கிடைத்ததை பகிர்ந்து கொண்டனர். பின்னர் மனிதன் நால்வகை நிலத்திலும் உற்பத்தியான பொருள்களைப் பிறருக்குப் பண்டமாற்று முறையில் விற்பனை செய்ய ஆரம்பித்தான்.
  • சந்தையில் பொருள்களை விற்கவும் வாங்கவும் கூடும் இடம் மட்டுமின்றி உறவுகளைப் பரிமாறிக் கொள்ளும் ஒரு கூடுகையாகவும் விளங்கியது.

சந்தைக்கும் மாலுக்கும் உள்ள வேறுபாடு:

  • சந்தையில் உற்பத்தி செய்கின்றவனே விற்பனையாளராகிறான்.
  • எந்தப் பொருளை யார் வேண்டுமானாலும் தொட்டு பார்த்து பேசி, மகிழ்வோடு வாங்கிச் செல்வார்கள்.
Similar questions