உருவக அணி்ய எடுத்துககொடடு்டன எழுதுக.
Answers
Answered by
0
உருவக அணிய:
- கவிஞன் ஒரு பொருளை சிறப்பிக்க எண்ணி அதற்கு உவமையாகும் வேறொரு பொருளோடு ஒன்றுபடுத்திக் கூறுவார், உவமையின் தன்மையை உவமேயத்தின் மேல் ஏற்றிக் கூறுவது உருவக அணி ஆகும்.
- உவமை, உவமேயம் இரண்டும் ஒன்றே என்று தோன்றக் கூறுவது உருவக அணி ஆகும்.
- அதாவது உவமையாக உள்ள பொருளுக்கும், உவமிக்கப்படும் பொருளுக்கும் வேறுபாடில்லை இரண்டும் ஒன்றுதான் என்று கூறுவதாகும்.
எ.கா
"இன்சொல் விளைநிலம் ஈதலே வித்தாக
வன்சொல் களைகட்டு வாய்மை எருவட்டி
அன்புநீர் பாய்ச்சி அறக்கதிர் ஈன்றதோர்
பைங்கூழ் சிறுகாலைச் செய் "
இன்சொல் - நிலமாகவும்
வன்சொல் - களையாகவும்
வாய்மை - எருவாகவும்
அன்பு - நீராகவும்
அறம் - கதிராகவும்
உருவகப்படுத்தப்பட்டுள்ளன.
Answered by
0
Explanation:
உவமை அணி - மதிமுகம் (மதி போன்ற முகம்)
உருவக அணி - முகமதி (முகம்தான் மதி)
உவமை அணி - புலி போன்ற வீரன் வந்தான்
உருவக அணி - புலி வந்தான்
உவமை அணி - மலர்க்கை (மலர் போன்ற கை)
உருவக அணி - கைமலர் (கைகள்தான் மலர்)
உவமை அணி - வேல்விழி (வேல் போன்ற விழி)
உருவக அணி - விழி வேல் (விழிதான் வேல்)
Similar questions
Math,
5 months ago
Hindi,
5 months ago
India Languages,
11 months ago
India Languages,
11 months ago
Math,
1 year ago
English,
1 year ago