India Languages, asked by charitarth3799, 10 months ago

வேகம் மற்றும் திசைவேகம் ஒப்பிடு்க.

Answers

Answered by steffiaspinno
13

வேகம் மற்றும் திசைவேகம் ஒப்பிடுக;      

திசைவேகம்

  • திசைவேகம் என்பது எவ்வளவு விரைவாக, எந்த திசையை நோக்கி ஒரு பொருள் நகருகிறது என்பதையும்  குறிப்பதாகும்.
  • இது ஒரு வெக்டர் அளவு ஆகும்
  • திசைவேகம் நேர் மற்றும் எதிர்க்குறி மதிப்பு இரண்டையும் பெறும்.
  • ஆனால், ஒரு பேருந்து 60 கிமீ வேகத்தில் கிழக்கு நோக்கி இயங்கிக் கொண்டிருக்கிறது என்று குறிப்பிட்டால், அது திசைவேகம் என  குறிப்பிடப்படுகிறது.
  • வட்டத்தில் நிகழும் இயக்கத்தைக் கருதுவோமானால், இவற்றுக்கு இடையில் உள்ள பெரிய வேறுபாட்டைக் காணலாம்.
  • வட்ட வழித்தடத்தில் ஒரு பொருள் நிலையான வேகத்தில் இயங்கி, அது தன் தொடக்கப் புள்ளிக்கே திரும்பினால், அதன் சராசரி திசைவேகம் சுழியம் அல்லது பூச்சியம் ஆகும்

வேகம்

  • வேகம் என்பது தொலைவிற்கு ஏற்றவாறு மாறுபட்ட வீதம் .
  • ஒரு ஸ்கேலார் அளவு ஆகும்  
  • வேகம் என்பது எத்திசையிலும் நேர் மதிப்பினைப் பெறும்.
  • ஒரு பேருந்து 60 கிமீ/ம வேகத்தில் இயங்கிக் கொண்டிருக்கிறது என்றால், அதன் வேகம் மட்டுமே குறிப்பிடப்படுகிறது.
  • சராசரி வேகம், வட்டப் பரிதியை அது வட்டத்தைச் சுற்ற எடுத்துக்கொண்ட நேரத்தால் வகுத்தால் கிடைக்கும் மதிப்பாகும்.
  • சராசரி திசைவேகம் தொடக்கப் புள்ளியிலும் முடிவுப் புள்ளியிலும் உள்ள இடப்பெயர்ச்சி நெறியங்களைக் கருதிக் கணக்கிடப்படுவதால் இந்நிலை உருவாகிறது.
  • ஆனால் சராசரி வேகமோ மொத்தப் பயணத் தொலைவையும் கருதுகிறது.
Answered by Anonymous
4

Explanation:

திசைவேகம் அல்லது விரைவு (velocity) என்பது ஒரு பொருளின் குறிப்பிட்ட திசையில் நிகழும் இடப்பெயர்ச்சி வீதம் ஆகும். குறிப்பிட்ட நேர அலகுக்கு (எடுத்துக்காட்டாக ஒரு நொடிக்கு) ஒருதிசையில் ஒரு பொருள் எவ்வளவு தொலைவுக்கு இடம்பெயர்கிறது என்பது திசைவேகம் ஆகும். திசைவேகமானது அதன் பருமையாலும், இயங்கும் திசையாலும் குறிப்பிடப்படுகிறது (எ.கா: வடக்கு நோக்கி 60 கி.மீ./மணி (km/hr)). பொருள்களின் இயக்கத்தை விவரிக்கும் செவ்வியல் இயக்கவியலின் ஒரு கிளைப்பிரிவாகிய இயக்கவடிவியலில், திசைவேகம் என்பது ஓர் அடிப்படையான முதன்மை வாய்ந்த கருத்துரு ஆகும்.

Similar questions