ஃப்ளெமிங்கின் இடக்கை விதியைக் கூறுக.
Answers
Answered by
0
ஃப்ளெமிங்கின் இடது கை விதி
- இடது கையின் பெருவிரல், ஆள்காட்டி விரல், நடுவிரல் ஆகிய மூன்றையும் ஒன்றுக்கு ஒன்று செங்குத்தாக வைக்க வேண்டும்.
- அவ்வாறு வைக்கும் போது நடுவிரல் ஆனது மின்னோட்டத்தின் திசையையும். சுட்டு விரல் காந்தப்புலத்தின் திசையையும் குறித்தால், பெருவிரலானது கடத்தி இயங்கும் திசையினை குறிக்கும்.
- இந்த விதியினை ஜான் ஆம்ப்ரோஸ் ஃபிளெமிங் கூறினார்.
- மின்மோட்டார் ஆனது ஃப்ளெமிங்கின் இடது கை விதியின் அடிப்படையில் செயல்படுவதால் இந்த விதியானது மின்மோட்டார் விதி என அழைக்கப்படுகிறது.
- விசை ஒரு வெக்டர் அளவாக உள்ளதால் இதற்கு எண்மதிப்பும் திசையும் இருக்கும்.
- இந்த விசை செயல்படும் திசையினை அறிய ஃப்ளெமிங்கின் இடது கை விதி பயன்படுகிறது.
Similar questions
Math,
5 months ago
Accountancy,
5 months ago
Math,
5 months ago
India Languages,
10 months ago
India Languages,
10 months ago
Biology,
1 year ago