India Languages, asked by guptasakshi9148, 9 months ago

நோய் எதிர்ப்பு திறனூட்டல் என்றால் என்ன? தடுப்பூசி மருந்துகளின் இரு வகைகள் யாவை?

Answers

Answered by Anonymous
0

Answer:

தடுப்பூசிகளில் 4 முக்கிய வகைகள் உள்ளன: நேரடி-விழிப்புணர்வு தடுப்பூசிகள். செயலற்ற தடுப்பூசிகள். சப்யூனிட், மறுசீரமைப்பு, பாலிசாக்கரைடு மற்றும் இணைந்த தடுப்பூசிகள்.

Answered by steffiaspinno
0

நோய் எதிர்ப்பு திறனூட்டல் மற்றும் தடுப்பூசி மருந்து வகைகள்:

நோய் எதிர்ப்பு

  • நோய் எதிர்ப்பு திறனூட்டல் என்பது ஆன்டிஜென்களையோ (அ) ஆன்டிபாடிகளையோ (நோய் எதிர் உயிர்பொருள்) கொடுத்து நோய்க்கு எதிராகத் தடுப்பினை ஏற்படுத்தும் செயல் ஆகும்.  
  • நோய் தடுப்பு மருந்தினை உடலினுள் செலுத்தி நோயினைத் தடுக்கும் செயல் தடுப்பூசி போடுதல் எனப்படும்.  
  • இது இரு வகைப்படும்.  

உயிருள்ள தடுப்பூசி மருந்துகள்:  

  • நோயுண்டாக்கும் உயிரிகளின் நோயுண்டாக்கும் திறன் வலுவிழக்கச் செய்யப்பட்டு இம் மருந்துகள் கொடுக்கப்படுகின்றன.  
  • எ.கா. பிசிஜி தடுப்பூசி - வாய்வழி போலியோ சொட்டு மருந்து  

கொல்லப்பட்ட தடுப்பூசி மருந்துகள்:  

  • வெப்பம் (அ) வேதிப்பொருள்களால் நோயுண்டாக்கும் நுண்ணுயிரி கொல்லப்பட்டு செயலிழக்கம் செய்யப்படுகிறது.
  • முதன்மையான ஊட்டம் அதைத் (dose) தொடர்ந்து அடுத்தடுத்த வலுவூட்டும் ஊட்டம் வழங்கப்பட வேண்டும்.  
  • எ.கா. டைபாய்டு, காலரா, கக்குவான் தடுப்பூசிகள்  
Similar questions