Social Sciences, asked by vector3986, 11 months ago

மக்களவையில் சபாநாயகர் பற்றி குறிப்பு வரைக

Answers

Answered by Anonymous
1

Answer:

தொகு

இந்த அவையின் மொத்த உறுப்பினர்களின் எண்ணிக்கை 545 ஆகும். இது மாநிலத் தொகுதிகளில் இருந்தும், ஒன்றியப் பிரதேச தொகுதிகளில் இருந்தும் மக்களால் தேர்ந்தெடுக்கப்படும் 543 உறுப்பினர்களையும், இந்தியக் குடியரசுத் தலைவரால் நியமிக்கப்படும் 2 நியமன உறுப்பினர்களையும் உள்ளடக்கிய எண்ணிக்கையாகும். இது இந்திய அரசியல் சட்டத்தில் கூறப்படுள்ளதன்படி வரையறுக்கப்பட்டதாகும்.

இந்த அவையில் அதிகபட்சமாக இரண்டு ஆங்கிலோ இந்தியர்கள் குடியரசுத் தலைவரால் நியமிக்கப்படுகிறார்கள். இருப்பினும் குடியரசுத் தலைவர் இந்த எண்ணிக்கை குறித்து மறுதலிக்கும் பட்சத்தில் இந்த எண்ணிக்கையை கூட்டவோ, குறைக்கவோ அரசியல் சட்டத்தில் வழி வகை செய்யப்பட்டுள்ளது.

2014 ஆம் ஆண்டில் நடைபெற்ற இந்தியப் பொதுத்தேர்தலின் மூலம் நாட்டின் பதினாறாவது மக்களவை துவங்கியுள்ளது. இவர்கள் மக்களின் நேரடியான சார்பாளர்கள் ஆவர். இவர்களின் பதவிக்காலம் ஐந்து ஆண்டுகள். அதன்பிறகு இதன் ஆயுள் மற்றும் பொறுப்புகள் தானாகவே செயலிழந்துவிடும். அவசரநிலைப் பிரகடன காலத்தின் போது இதன் செயல்பாடுகளை குறிப்பிட்ட காலம் வரை முடக்கப்படலாம் அல்லது ஒரு வருடம் காலம் வரை நீட்டித்து முடக்கலாம்.

Answered by anjalin
1

மக்களவையில் சபாநாயகர்  

  • சபாநாயகர் என்பவர் மக்களவையை தலைமையேற்று நடத்துபவர் ஆவார்.
  • மக்களவையில் உள்ள உறுப்பினர்களால் தேர்ந்தெடுக்கப்படுவர் சபாநாயகர்.
  • நாடாளுமன்ற மக்களாட்சியில் சபாநாயகரின் பதவி என்பது ஒரு முக்கிய பங்கை அளிக்கிறது.
  • மக்களவைத் கலைக்கப்பட்டாலும் கூட சபாநாயகரின் பணி நீடித்துக் கொண்டே இருக்கும்.
  • நாடாளுமன்றத்தின் இரு அவைகளின் கூட்டுக் கூட்டத்திற்கு தலைமை வகிப்பவர்.
  • ஒரு மசோதாவை நிதி மசோதா அல்லது சாதாரணமாக என தீர்மானிக்கும் அதிகாரம் சபாநாயகருக்கு உண்டு.
  • தீர்மானிப்பது சபாநாயகரின் முடிவே இறுதியானது இந்திய அரசியலமைப்பு சட்டத்தில் 10வது அட்டவணை அடிப்படையில் ஒரு உறுப்பினர் மக்களவை உறுப்பினராக தகுதி பெற்றவரா இல்லையா என்பதை தீர்மானிக்கும் அதிகாரம் சபாநாயகருக்கு 1985ஆம் ஆண்டு கட்சி தாவல் தடை சட்டத்தின் படி தெரியவந்துள்ளது .
Similar questions