பின்வரும் கூற்றுகளில் ஒரு செல் சவ்வின் பங்கை விளக்கும் கூற்று எது?
அ. செல்லின் வழியாக பொருட்கள் எளிதாக உள்நுழையவும்,வெளியேறவும் முடியும்.
ஆ. செல்லின்வழியாக பொருட்கள் எளிதாக நகருகின்றன.
இ. செல்லினுள் பொருட்கள் நுழைவதை தடை செய்கின்றன.
ஈ. செல்லிலிருந்து பொருட்கள் வெளியேறுவதை தடுக்கின்றன.
Answers
உயிரினங்களின் அடிப்படையாக உள்ளது
(a)
செல்
(b)
புரோட்டோப் பிளாசம்
(c)
செல்லுலோஸ்
(d)
உட்கரு
2.
நான் ஒரு விலங்குசெல்லின் வெளிப்புற அடுக்கு. நான் யார்?
(a)
செல் சுவர்
(b)
உட்கரு
(c)
செல் சவ்வு
(d)
உட்கரு சவ்வு
3.
செல்லின் மூளையாகச் செயல்படும் செல்லின் பாகம் எது?
(a)
லைசோசோம்
(b)
ரைபோசோம்
(c)
மைட்டோகாண்ட்ரியா
(d)
உட்கரு
4.
________ செல் பகுப்பிற்கு உதவுகிறது.
(a)
எண்டோபிளாஸ்மிக் வளை
(b)
கோல்கை உறுப்புகள்
(c)
சென்ட்ரியோல்
(d)
உட்கரு
5.
செல்லின் பல்வேறு உறுப்புகளுக்குப் பொருத்தமான அறிவியல் சொல் _______
(a)
திசு
(b)
உட்கரு
(c)
செல்
(d)
செல் நுண்உறுப்பு
5 x 1 = 5
6.
செல்லில் உள்ள ஜெல்லி போன்ற பொருள் _________ என்று அழைக்கப்படுகிறது.
7.
நான் தாவரத்தில் சூரிய ஆற்றலை உணவாக மாற்றுவேன். நான் யார் ____________
8.
முதிர்ந்த இரத்தச் சிவப்பு செல்லில் ____________ இல்லை
9.
ஒரு செல் உயிரினங்களை ___________ மூலமே காண இயலும்.
10.
சைட்டோபிளாசம் + உட்கரு = ________
6 x 1 = 6
11.
விலங்கு செல்களில் செல் சுவர் உள்ளது.
(a) True
(b) False
12.
சால்மோனெல்லா என்பது ஒரு செல்லால் ஆன பாக்டீரியா ஆகும்.
(a) True
(b) False
13.
செல் சவ்வு அனைத்தையும் ஊடுருவ அனுமதிக்கக்கூடியது.
(a) True
(b) False
14.
தாவர செல்களில் மட்டுமே பசுங்கணிகங்கள் உள்ளன.
(a) True
(b) False
15.
மனித வயிறு ஒரு உறுப்பாகும்.
(a) True
(b) False
16.
ரைபோசோம் ஒரு சவ்வுடன் கொண்ட சிறிய நுண் உறுப்பு ஆகும்.
(a) True
(b) False
5 x 1 = 5
கடத்தும் கால்வாய்
(1)
எண்டோபிளாச வலைப்பின்னல்
தற்கொலைப் பை
(2)
மைட்டோகாண்ட்ரியா
கட்டுப்பாட்டு அறை
(3)
உட்கரு
ஆற்றல் மையம்
(4)
லைசோசோம்
உணவு தயாரிப்பாளர்
(5)
பசுங்கணிகம்
.............
இங்கு கொடுக்கப்பட்டுள்ள கூற்றுகளில் சரியான கூற்று: செல்லின் வழியாக பொருட்கள் எளிதாக உள்நுழையவும், வெளியேறவும் முடியும்.
விளக்கம்:
- ஒரு சவ்வின் எடையில் 40% லிப்பிடுகளால் ஆனது. இதற்க்கான காரணம் லிப்பிடுகள் இரண்டு மூலக்கூறு அடுக்குகளால் ஆனது. எலக்ட்ரான் நுண்ணோக்கியின் உதவியுடன் அறிவியலாளர்கள் RBC சவ்வின் அமைப்பை ஆராய்ந்தனர். இதன்மூலம் எல்லா செல் சவ்வுகளும் மூன்று அடுக்குகளாக உள்ளன என்பதை கண்டறிந்தனர். ஒவ்வொரு செல் சவ்வும் இரண்டு புரத சவ்வுகளும், ஒரு மெல்லிய மத்திய பாஸ்போ லிப்பிடுகளால் ஆனது.
- ஓரலகு சவ்வு அமைப்பு மாதிரியானது செல் சவ்வை மூன்றடுக்கு அமைப்பா க உருவகப்படுத்துகிறது. இதில், வெளிர்நிற ஆஸ்மியம்விரும்பும் அடுக்கினால் பிரிக்கப்பட்டுள்ள இரண்டு அடர் நிற ஆஸ்மியம்விரும்பும் அடுக்குகளைக் கொண்ட மூவடுக்கு அமைப்பாக செல்கள் உருவகப்படுத்த ப்படுகின்றன.