உவகை என்ற மெய்ப்பாடு தோன்றுவதற்குரிய களமாக தொல்காப்பியர் கூறுவது
அ) பெருமை ஆ) புதுமை இ) கொடை ஈ) விளையாட்டு
Answers
Answered by
2
உவகை என்ற மெய்ப்பாடு தோன்றுவதற்குரிய களமாக தொல்காப்பியர் கூறுவது - விளையாட்டு
தொல்காப்பியம்
- தொல்காப்பியம் = தொன்மை + காப்பியம். தமிழில் தற்போது உள்ள இலக்கியங்களில் மிகத் தொன்மை வாய்ந்த இலக்கண நூல் தொல்காப்பியம் ஆகும்.
- இது இலக்கிய வடிவில் அமைந்த ஓர் இலக்கண நூல் ஆகும். இதனை இயற்றியவர் தொல்காப்பியர் ஆவார்.
மெய்ப்பாடுகள்
- உள்ள உணர்வுகளை உடல் உறுப்பினால் வெளிப்படுத்துவது மெய்ப்பாடு ஆகும். தொல்காப்பியத்தில் எட்டு மெய்ப்பாடுகள் பற்றி கூறப்பட்டு உள்ளது. அவை நகை, அழுகை, இளிவரல், மருட்கை, அச்சம், பெருமிதம், வெகுளி, உவகை ஆகும்.
உவகை
- உவகை = மகிழ்ச்சி. தொல்காப்பியர் உவகை ஆனது ஒருவருக்கு செல்வம், புலன், புணர்வு மற்றும் விளையாட்டு ஆகிய நான்கு காரணங்களால் ஏற்படும் என்கிறார்.
Similar questions
Computer Science,
5 months ago
Math,
5 months ago
India Languages,
11 months ago
India Languages,
11 months ago
Chemistry,
1 year ago
Chemistry,
1 year ago