பின்வரும் கூற்றையும் அதற்குரிய காரணத்தையும் படித்துச் சரியான விடைக்குறிப்பைத்
தேர்ந்தெடுக்க.
கூற்று : ஒன்றோடொன்று பொருந்தி வளர்வதால், மூங்கில் அமை' எனப்பட்டது.
காரணம்: 'அம்' என்னும் வேர்ச்சொல்லிற்குப் பொருந்துதல் என்பது பொருள்.
௮) கூற்று சரி, காரணம் தவறு அ) கூற்று, காரணம் இரண்டும் தவறு
இ) கூற்று சரி, காரணம் போதுமானதன்று ஈ) கூற்று, காரணம் இரண்டும் சரி
Answers
Answered by
0
கூற்று, காரணம் இரண்டும் சரி
- தொல்காப்பியத்தில் உள்ள உரியியல் இயலில் உள்ள ஒரு நூற்பா அமர்தல் மேவல் ஆகும்.
- இதில் அமர்தல் என்பதன் பொருள் பொருந்துதல் ஆகும். அமர்தல் என்பதன் அடிப்பகுதி (வேர்ச்சொல்) அம் என்பது ஆகும்.
- இதன் காரணமாகவே ஒன்றோடு ஒன்று பொருந்தி வளரும் மூங்கீல் தாவரத்தினை அம் அமை என்று அழைப்பர்.
- ஆடமை புரையில் வனப்பில் பணைத்தோள் என்னும் குறுந்தொகை பாடலில் ஆடுகின்ற மூங்கீல் தாவரம் (ஆடு+அமை) ஆடமை என அழைக்கப்பட்டு உள்ளது.
- ஒன்றோடொன்று பொருந்தி வளர்வதால், மூங்கில் அமை எனப்பட்டது. 'அம்' என்னும் வேர்ச்சொல்லிற்குப் பொருந்துதல் என்பது பொருள். எனவே கூற்று, காரணம் இரண்டும் சரியாக உள்ளது.
Similar questions