மற்றவற்றுடன் தொடர்பில்லாத ஒன்றைத் தேர்ந்தெடு
அ) தகவல் மீட்பு ஆ) தகவல் பிரித்தெடுத்தல்
இ) பனுவல் சுருக்கம் ஈ) எந்திர மொழிபெயர்ப்பு
Answers
Answered by
0
எந்திர மொழிபெயர்ப்பு தொடர்பில்லாத ஒன்று .
தகவல் பெறுவி
- ஒரு இலக்கியம், இலக்கணம், தலைப்பு அல்லது கருத்து தொடர்பான அனைத்து தகவல்களை திரட்டித் தரும் மென்பொருள் கருவிக்கு தகவல் பெறுவி என்று பெயர். இது தேடும் தகவல் ஒரே அல்லது பல மொழியாக இருந்தாலும் அதனை மீட்டு எடுக்கும்.
தகவல் பிரித்தெடுத்தல்
- குறிப்பிட்ட ஒரு துறைக்கு தொடர்பான செய்திகள், சொற்களை கணினி மூலம் தானாக பிரித்தெடுக்கும் முறைக்கு தகவல் பிரித்தெடுத்தல் என்று பெயர்.
பனுவல் சுருக்கம்
- பனுவல் சுருக்கம் என்பது மனிதன் ஒரு நூலிற்கான முன்னுரையினை தந்து அந்த நூலினை படிப்பதற்கு முன்பே அதில் உள்ள கருத்தினை அறிய உதவுவது போல் கணினியில் செய்ய உதவும் கருவி ஆகும். இவை மூன்றும் பொருண்மை ஆய்வின் அடிப்படையில் செயல்படும்.
Similar questions