திறன்பேசிகளில் செய்துமுடிக்கும் பணிகளில் நான்கனைச் சுட்டுக.
Answers
Answered by
0
திறன்பேசிகளில் செய்துமுடிக்கும் பணி
- தொடு திரை உடைய கையடக்க அலைபேசியே திறன்பேசி ஆகும். இது தகவல் தொடர்பு உடன் கற்றல், பொழுது போக்கு மற்றும் இணையத் தேடல் போன்ற செயலிகள் காணப்படும் சாதனமாக உள்ளது. திறன் பேசியில் ஏற்ற மாபெரும் வளர்ச்சியின் காரணமாக 2011க்கு பிறகு பல தொழில் நுட்ப மாற்றங்கள் உருவாகின. தற்போது கணினியில் செய்ய பணிகளை திறன்பேசியின் மூலமாகவே செய்ய நிலை ஏற்பட்டுள்ளது. மின்னஞ்சல் சேவை, தகவல் தேடல், செய்தியினை அறிதல், வங்கி பணப்பரிமாற்றம், பயணச் சீட்டு முன்பதிவு, சமூக வலைத்தளங்களில் தகவல் பரிமாற்றம், மின்வணிகம் உள்ளிட்ட இணையம் வழியே செய்யக் கூடிய அனைத்து செயல்களையும் கணினியினை போல திறன் பேசியிலும் செய்ய முடியும்.
Similar questions