வண்டு – தேன்தமிழர் - தமிழ்ச்சுவை இவற்றை ஒப்பிட்டுப் பெருஞ்சித்திரனார் குறிப்பிடும் செய்தி யாது?
Answers
Answer:
தமிழ்த்தேசியத்தந்தை என்று அறியப்படும் பெருஞ்சித்திரனார் (மார்ச் 10, 1933 – சூன் 11, 1995) இருபதாம் நூற்றாண்டின் தமிழ்ப் பல்துறை அறிஞர்களில் முதன்மையான ஒருவர். தனித்தமிழ்த் தந்தை மறைமலையடிகளார், மொழிஞாயிறு பாவாணர் ஆகியோரின் கொள்கை கற்றவர்களிடமும், மற்றவர்களிடமும் பரவப் பெருங்காரணமாக விளங்கியவர். தமிழீழத் தேசியத்தலைவர் பிரபாகரன் தமிழகத்தில் முதன்முறையாக வந்த காலத்தில் அவரையும் அவரது தோழர்களையும் அரணாகக் காத்து அவர்களை வளர்தெடுத்தவரும் இவர்தான். தமிழரசன் போன்ற தமிழ்த் தலைவர்களுக்கு ஆதி காரணமாய் விளங்கியவரும் இவரே. 20 முறை சிறை சென்றும், இந்தி எதிர்ப்புப் போராட்டம் முதல் தமிழீழப் போராட்டம் வரை இவரது செயல்பாடுகள் தமிழர்கள் நடுவில் வியந்து போற்றப்படுகின்றன. தமிழ்த் தேசியத் தந்தையாக இன்று தமிழர்களால் போற்றப்படுகிறார்
வண்டு – தேன்தமிழர் - தமிழ்ச்சுவை இவற்றை ஒப்பிட்டுப் பெருஞ்சித்திரனார் குறிப்பிடும் செய்தி:
- பெருஞ்சித்திரனார் அவர்கள் தமிழைப்பற்றி புகழ்ந்து பாடும் பாடலில்
“செந்தா மரைத்தேனைக் குடித்துச்
சிறகார்ந்த அந்தும்பி பாடும்
அதுபோல யாம்பாடி முந்துற்றோம்
யாண்டும் முழங்கத் தனித்தமிழிலே!" என்பார்.
- அதாவது வண்டு எவ்வாறு மழைநீரில் இருக்கக்கூடிய தேனை குடித்துவிட்டு சிறகசைத்து ஆனந்தமாக பாடி தெரியுமோ அதுபோன்று:
- நாம் தமிழைப் படித்து சுவைத்து உள்ளத்தில் உறுதி கொண்டு அந்த தமிழின் பெருமையை உலகெங்கும் முழங்கச் செய்திடுவோம் என்பதாக தமிழின் பெருமையை தெரிந்திருந்தும் ஒப்பிட்டு பாடுவார்.
- எனவே தமிழின் தனிச் சிறப்பையும், பெருமையும் உணர்த்துவதற்காக தேன் அருந்தும் வண்டை உவமையாக்கி பெருஞ்சித்தனார் அவர்கள் தமிழின் பெருமையும் உணர்த்துவார்கள்.
- தமிழைப் பற்றி இவ்வளவு தெளிவாகவும் உணர்வோடும் சொல்வதற்கு காரணம் இவர் தமிழுக்காகவே வாழ்ந்து மடிந்தவர்.