India Languages, asked by aditys4533, 10 months ago

பூவின் நிலைகளை குறிக்கும் சொற்கள் யாவை?

Answers

Answered by Anonymous
73

Answer:

மரம், செடி, கொடி, புல் முதலான நிலத்திணைகளில் காணப்படும் ஓர் உறுப்பு. இது பல்வேறு நிறங்களிலும், பல்வேறு மணங்கள் பரப்புவனவாகவும், பல்வேறு மென்மைகளுடன் காணப்படும். தன் இனத்தைப் பரப்ப, காயாகிப் பழமாகி விதைகள் உருவாக்கும் முன் சூல்கொள்ளும் உறுப்பு.

Answered by anjalin
29

பூவின் நிலை:

  • தாவரத்தின் ஒவ்வொரு பகுதியையும் குறிப்பதற்கு எப்படி தனித்தனிச் சொற்கள் உண்டோ அதே போன்று பூவின் நிலைகளை குறிப்பதற்கு தனித்தனிச் சொற்கள் உண்டு.
  • பூ தோன்றக் கூடிய நிலையை அரும்பு என்று அழகிய தமிழில் சொல்வதுண்டு.
  • அதே பூ விரிய தொடங்கக் கூடிய நிலையை அடைந்தால் அதை போது என்று சொல்வர்.
  • அதே பூ மலர்ந்த நிலையை அடைந்து விட்டால் அதை மலர் அல்லது அலர் என்று அழைப்பர்.
  • அதே பூ தன் செடியிலிருந்து கீழே விழக்கூடிய நிலையை அடைந்தால் வீ என்று சொல்லப்படும்.
  • கடைசியாக அந்த பூ வாடிப் போன நிலையை அடையும் பொழுது அதற்கு செம்மல் என்று சொல்லப்படும். இதுவே பூவின் நிலைகளாகும்.
Similar questions