India Languages, asked by ArqamWaqar1007, 8 months ago

பத்மகிரி நாதர் தென்றல் விடு தூது என்ற நூலின் ஆசிரியர் ?

Answers

Answered by Anonymous
3

Explanation:

சிற்றிலக்கியப் புலவர்கள்

இந்த நூற்றாண்டில் மடங்களைச் சேர்ந்த பெரும்புலவர்கள் சிற்றிலக்கியங்களைத் தம் ஞானாசிரியர் மீதும் தம் ஊர் மீதும் தம் ஊர் இறைவன் மீதும் பாடினர். வள்ளல்களால் ஆதரிக்கப் பெற்றவர்கள் அவர்களைப் பாடினர். இசுலாமிய, கிறித்தவச் சமயத்தவர்கள் கூட இதனால் சிற்றிலக்கியங்களைப் போற்றினர். எனவே சைவ, வைணவச் சமயங்களுக்கே உரியதாக இருந்த சிற்றிலக்கிய வகைகள் பரந்து விரிந்தன.

3.5.1 தொட்டிக்கலை சுப்பிரமணிய முனிவர்

திருவாவடுதுறை ஆதீனத் தம்பிரானான இவர் தொண்டை நாட்டு தொட்டிக்கலையில் வாழ்ந்ததால் இப்பெயர் பெற்றார். இவர் சிவஞான முனிவரின் மாணவர். தம் ஆசிரியர் மீது கீர்த்தனைகள், துதி, விருத்தங்கள் பாடினார். நாட்டுப்பாடல் பாங்கில் பல தனிப்பாடல்களை இயற்றியுள்ளார். தம் ஞானாசிரியரான அம்பலவாண தேசிகர் மீது பஞ்சரத்தின மாலை, வண்ணம், ஆனந்தக் களிப்பு என்பன பாடியுள்ளார். தவிர திருவாவடுதுறைக் கோவை, திருக்கலசைக் கோவை, சிலேடை வெண்பா, திருக்கலசை சிதம்பரேசர் சந்நிதிமுறை, திருக்கலசை வண்ணம், திருக்கலசை பஞ்சரத்தினம், திருக்கலசை பரணி, திருக்கலசைக் கட்டியம் என்பன பாடியுள்ளார்.

3.5.2 கந்தப்பையர்

கச்சியப்ப முனிவரின் மாணவரான இவர் வீர சைவராகத் திகழ்ந்தார். தணிகை ஆற்றுப்படை, தணிகையுலா, தணிகைக் கலம்பகம், தணிகை அந்தாதி, தணிகைப் பிள்ளைத் தமிழ், தணிகைப் புராணம் என்னும் நூல்களைப் பாடினார். சிவப்பிரகாச சுவாமிகளைப் போன்றே, திருச்செந்தூரைப் பற்றி நிரோட்டக யமக அந்தாதி பாடி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

3.5.3 பலபட்டடை சொக்கநாதப் பிள்ளை

பலபட்டடை = பண்டமுள்ள அறை. மதுரை மன்னர்களிடம் பலபட்டடைக் கணக்கு அலுவல் பார்த்ததால் இவர் மரபினர்க்கு இப்பெயர் ஏற்பட்டது. கன்னிவாடி ஜமீன்தார் நரசிங்க நாயக்கரால் புரக்கப் பெற்ற இவர், அவர்மீது வளமடல் ஒன்று பாடினார். மதுரைச் சொக்கநாதர் - அங்கயற்கண்ணி மீது தனிப்பாடல் பல பாடினார். மதுரை மும்மணிக் கோவை, இராமேசுவரத்தைப் பற்றிய தேவையுலா, திண்டுக்கல்லைப் பற்றிய பத்மகிரி நாதர் தென்றல் விடு தூது, அழகர் கிள்ளை விடு தூது என்ற நூல்களைப் பாடியுள்ளார்.

3.5.4 கந்தசாமிப் பு

Answered by anjalin
8

பத்மகிரி நாதர் தென்றல் விடு தூது:

  • பத்மகிரி நாதர் தென்றல் விடு தூது என்ற நூலின் ஆசிரியர் பலபட்டடைச் சொக்கநாதப் புலவர்.
  • இவர் காற்றைப் பற்றி புகழும் இவரது புகழ் பாடல் நம்முடைய பாடப் பகுதியில் இடம் பெற்றிருக்கின்றன.
  • அதாவது சிற்றிலக்கியத்தில் பெண் ஒருவள் “நந்தமிழும் தண்பொருநை நன்னதியும் சேர் பொருபிற் செந்தமிழின் பின்னுதித்த தென்றலே” எனத் தூது செல்ல அன்போடு அழைக்கிறாள் என்று தம் பாடல் வரிகளை பதிவு செய்கிறார்.
  • அதோடு மட்டுமல்ல நதியில் விளையாடி கொடியில் தலை சீவி நடந்த இளம் தென்றலே எனவும் காற்றை புகழ்ந்துள்ள அவரது வரிகள் மிக அழகானவை.
  • இதன் மூலமாக நாம் உணர்வது ஆக, காற்று பல்வேறு படைப்புகள், இலக்கிய படைப்புகள், திரைப்பட பாடல்கள் என பலவற்றிலும் இடம் பிடித்திருப்பது குறிப்பிடத்தக்கது.
Similar questions