இன்மையிலும் விருந்தோம்பல் குறித்து இலக்கியங்கள் கூறும் செய்தியைக் கூறு ?
Answers
Answered by
47
இன்மையிலும் விருந்தோம்பல் குறித்து
- தமக்கு வறிய நிலை இருந்தாலும் வீட்டிற்கு வரும் விருந்தினர்களுக்கு எப்படியாவது முயற்சி செய்து விருந்து உபசரிப்பு செய்தனர் நம் முன்னோர் என்று பாராட்டுகிறது புறநானூறு.
- தன் வீட்டிற்கு வந்த சிவனடியாருக்கு விருந்தளிக்க தன்னிடம் ஒன்றுமே இல்லாத போது அன்று விதைத்து விட்டு வந்த நெல்லை எடுத்து வந்து சமைத்து சிவனடியாருக்கு கொடுத்தார் என்று பெரியபுராணம் புகழ்கிறது.
- இதை தொடர்ந்து தானியம் ஏதும் இல்லாத நிலையில் தன்னிடம் வைத்திருந்த திணையை உரலில் மூலம் இட்டு குத்து எடுத்து விருந்தளித்தார் தலைவி என்றும், தன்னிடம் இருந்த கருங்கோட்டுச் சீறியாழை பணையம் வைத்தான் தலைவன் என்றும் இப்படியெல்லாம் விருந்தோம்பல் செய்தவர்களை பற்றி குறிப்பிடுகின்றது நம் பழம் பெரும் நூல்கள்.
Similar questions