India Languages, asked by RakulPreetSingh7795, 11 months ago

சரியான கூற்று தேர்வு செய்க ?
அ) கட்டுரையைப் படித்தாள் என்பது உரிச்சொல் தொடர்
ஆ) அன்பால் கட்டினார் இது நான்காம் வேற்றுமைத் தொகாநிலைத் தொடர்

Answers

Answered by steffiaspinno
3

இரு கூற்றுகளும் தவறாகும் .

தொகாநிலைத் தொடர்கள்:

  • ஒரு தொடர் மொழியில் இருசொற்கள் இருந்து அவற்றின் இடையில் சொல்லோ உருபோ இல்லாமல் அப்படியே, பொருளை உணர்த்துவது தொகாநிலைத் தொடர் எனப்படும்.
  • தொகாநிலைத் தொடர்கள் ஒன்பது வகைப்படும்.

வேற்றுமைத்தொடர்:

  • வேற்றுமை உருபுகள் பயின்று வரும் தொடர்கள் வேற்றுமைத்தொடர்கள் ஆகும்.

அ) கட்டுரையைப் படித்தாள்  என்பது இரண்டாம் வேற்றுமை தொகா நிலைத்தொடர் ஆகும் .

  • இதில் " ஐ " எனும் வேற்றுமை உருபு வெளிப்படையாக வந்துள்ளது.  
  • எனவே  கட்டுரையைப் படித்தாள் உரிச்சொல் என்பது தவறாகும். .

ஆ) அன்பால் கட்டினார் என்பது  மூன்றாம் வேற்றுமைத் தொகாநிலைத் தொடர்

  • இதில் " ஆல் " எனும் வேற்றுமை உருபு வெளிப்படையாக வந்துள்ளது.
  • அன்பால் கட்டினார்  நான்காம் வேற்றுமைத் தொகாநிலைத் தொடர் என்பது தவறான கூற்றாகும்.  
Similar questions