மலைபடுகடாம் நூல் பற்றி குறிப்பு வரைக ?
Answers
Answered by
25
Explanation:
சங்ககாலத் தொகுப்புகளுள் ஒன்றான பத்துப்பாட்டு நூல்களுள் ஒன்று மலைபடுகடாம். இத் தொகுப்பிலுள்ள நூல்களுள் இரண்டாவது பெரிய நூல் இது. 583 அடிகளால் ஆன இப் பாடலை இயற்றியவர், பெருங்குன்றூர் பெருங் கௌசிகனார் என்னும் புலவர் ஆவார். இந்த நூலைக் கூத்தராற்றுப்படை எனவும் குறிப்பிடுவர்.[1]
நவிர மலையின் தலைவனான நன்னன் என்பவனைப் பாட்டுடைத் தலைவனாகக் கொண்டு பாடப்பட்டது இந்நூல். நவிர மலை மக்களின் வாழ்க்கை முறைகளையும், அவர்கள் தலைவனின் கொடைத் திறத்தையும் புகழ்ந்து பாடும் இந் நூற் பாடல்களில், அக்காலத் தமிழரின் இசைக்கருவிகள் பற்றியும் ஆங்காங்கே குறிப்புக்கள் காணப்படுகின்றன. நன்னனைப் பாடிப் பரிசு பெறச்செல்லும் பாணர், நெடுவங்கியம், மத்தளம், கிணை, சிறுபறை, கஞ்சதாளம், குழல், யாழ் போன்ற பலவகை இசைக் கருவிகளை எடுத்துச் செல்வது பற்றிய செய்திகள் கூறப்பட்டுள்ளன.
Answered by
24
மலைபடுகடாம்
- மலைபடுகடாம் என்ற இந்நூலுக்கு கூத்தராற்றுப்படை என்ற மற்றொரு பெயரும் உண்டு.
- இந்த மலைபடுகடாம் என்ற நூல் சங்கத் தொகுப்பு நூல்களுள் ஒன்றான பத்துப்பாட்டில் கட்டுப்பட்ட நூல்களில் ஒரு நூலாகும்.
- மலைபடுகடாம் என்னும் இந்நூல் மிகப்பெரிய நூலாகும்.
- எந்தளவிற்கு என்றால் பத்துப்பாட்டு தொகுப்புகளில் இரண்டாவது பெரிய நூல் என்று மலைபடுகடாம் அறியப்படுகின்றது.
- இந்நூலில் பாட்டுடைத் தலைவனாகக் கொண்டு பாடப்பட்டவர் நன்னன் என்னும் குறுநில மன்னன் ஆவான்.
- இதைப் பாடியவர் இரணிய முட்டத்துப் பெருங்குன்றூர் பெருங்கௌசிகனார் ஆவர்.
- இந்நூலில் பாடல்களின் அடிகள் 583 ஆகும்.
- இதில் மலைக்கு யானையை ஊமையாக்கி அதன் ஓசையை கடாம் என்று சிறப்பித்து பாடப் பெற்றுருக்கின்றது.
Similar questions
Math,
7 months ago
History,
7 months ago
India Languages,
1 year ago
India Languages,
1 year ago
Math,
1 year ago
Computer Science,
1 year ago
Science,
1 year ago