India Languages, asked by shreyaa698, 11 months ago

கீழ்க்கண்டவற்றுள் பொருந்தாத இணையை தேர்ந்தெடுக்க
அ) காவேரி பயந்தது -எழுவாய்த் தொடர்
ஆ)பாடினால் கண்ணகி -வினைமுற்றுத் தொடர்
இ) நண்பா எழுது -விளித் தொடர்
ஈ) பாடி மகிழ்ந்தனர் – பெயரெச்சத்தொடர்

Answers

Answered by yadavpinky112
0

Answer:

sorry can't help because I don't know about this language

Answered by steffiaspinno
0

பொருந்தாத இணை:    

பாடி மகிழ்ந்தனர் -  பெயரெச்சத் தொடர்

  • முற்றுப்பெறாத வினைச்சொல், பெயர்சொல்லைக் கொண்டு முடிவது  பெயரெச்சத்தொடர் எனப்படும்.
  • இதில் பாடி எனும் முற்றுப்பெறாத வினைச்சொல் மகிழ்ந்தனர் எனும் மற்றொரு வினைச்சொல்லைக் கொண்டு முடிந்தது.
  • எனவே இது வினையெச்சத்தொடர் ஆகும்.

காவேரி பயந்தது -எழுவாய்த் தொடர்  

  • பெயர்ச்சொல்லைத் தொடர்ந்து பெயர், வினை, வினா ஆகிய பயனிலைகள் வருவது  எழுவாய்த்தொடர் ஆகும்.
  • எனவே இத்தொடர் சரியானதாகும்.

பாடினால் கண்ணகி -வினைமுற்றுத் தொடர்  

  • வினை முற்றுடன் ஒரு பெயர்ச்சொல் வருவது வினை முற்றுத் தொடர் ஆகும் .

நண்பா எழுது -விளித் தொடர்  

  • விளியுடன்  வினைச்சொல் வருவது  விளித் தொடர் ஆகும் .
  • நண்பா எனும் விளிச்சொல் எழுது எனும் பயனிலையைக் கொண்டு முடிந்துள்ளது.  
Similar questions