India Languages, asked by jikki9148, 9 months ago

பசித்தவருக்கு உணவிடுதல் என்ற அரசியலையும் விருந்தினருக்கு உணவு விடுதல் என்ற பண்பாட்டு சேலையும் ஒப்பிடுக ?

Answers

Answered by steffiaspinno
23

பசித்தவருக்கு உணவிடுதல் என்ற அறச்செயலையும் விருந்தினருக்கு உணவிடுதல் என்ற பண்பாட்டு செயலையும் ஒப்பிடுதல் :

  • பசித்தவருக்கு உணவிடுதல் என்பது ஒரு மனிதநேய செயலாகும்.
  • உணவு கொடுத்தோர் உயிர் கொடுத்தோரே என்ற குடபுலவியனார் சொல்லிற்கு ஏற்ப பசியால் வருந்தும் ஒவ்வொருவருக்கும் தேவைப்படும் நேரத்தில் உணவு அளிப்பது அவர்களுக்கு புத்துயிர் அளிப்பதாகும்.
  • பசித்தவருக்கு உணவிடுதல் என்பதற்கு எடுத்துக்காட்டாக விளங்கியது  மணிமேகலை வைத்திருந்த அமுதசுரபியாகும்.    
  • விருந்தினருக்கு உணவிடுதல் என்பது நாச்சுவைக்காகவும் விருந்தோம்பல் காரணமாகவும் உணவிடப்படுகிறது.
  • தமிழர் பண்பாடுகளில் மிகச் சிறந்த ஒன்றாக உள்ளது விருந்தோம்பல் பண்பாகும்.
  • அக்காலத்தில் வாழ்ந்த முன்னோர்கள் விருந்தோம்பல் பண்பை சிறப்பாக பின்பற்றினார்கள்.
  • ஆகவே இவர்கள் விருந்தளிக்கும் பண்பை பெறும்பேறாக கொண்டு உணவளித்தனர்.  
Similar questions