India Languages, asked by vidyathangjam2173, 11 months ago

சரியான கூற்றினை தேர்வு செய்க
அ) பழகப் பழகப் பாலும் புளிக்கும் என்பது வினைமுற்றுத் தொடர்
ஆ) வடித்த கஞ்சியில் சிலையை அலசினேன் என்பது ஐந்தாம் வேற்றுமைத் தொகாநிலைத் தொடர்

Answers

Answered by saishree47
1

Answer:

hey mate I really can understand you question

Answered by steffiaspinno
0

இரு கூற்றுகளும் தவறாகும்.

தொகாநிலைத்தொடர் :  

  • ஒரு தொடர் மொழியில் இருசொற்கள் இருந்து அவற்றின் இடையில் சொல்லோ உருபோ இல்லாமல் அப்படியே வந்து  பொருளை உணர்த்துவது தொகாநிலைத் தொடர் எனப்படும்.
  • இந்த தொகாநிலைத் தொடர்கள் ஒன்பது வகைப்படும்.  

அ) பழகப் பழகப் பாலும் புளிக்கும் என்பது அடுக்குத் தொடராகும்.  

  • ஒரு சொல்  இரண்டு மூன்று முறை அடுக்கி வருவது  அடுக்குத்தொடர் ஆகும்.  
  • எனவே பழகப் பழகப் பாலும் புளிக்கும் என்பது வினைமுற்றுத் தொடர் இக்கூற்று  தவறாகும்.

ஆ)வடித்த கஞ்சியில் சீலையை அலசினேன் என்பது பெயரெச்ச தொடராகும் .

  • வடித்த எனும் முற்றுப்பெறாத வினைச்சொல், கஞ்சியில் எனும் பெயர்சொல்லைக் கொண்டு முடிவது  பெயரெச்சத் தொடர் எனப்படும்.
  • எனவே வடித்த கஞ்சியில் சிலையை அலசினேன் என்பது ஐந்தாம் வேற்றுமைத் தொகாநிலைத் தொடர் எனும் கூற்று தவறாகும்.  
Similar questions