சதாவதானம் குறிப்பு வரைக ?
Answers
Answered by
20
சதாவதானம் பற்றிய குறிப்பு
- சதம் என்பதற்கு நூறு என்பது பொருள் ஆகும்.
- புலமை, நினைவு ஆற்றல் மற்றும் நுட்பமான அறிவு முதலியனவற்றினை ஒருவர் பெற்று, அதில் சிறப்பானவராக உள்ளாரா என்பதனை அறிய ஒரு சோதனை நிகழ்த்தப்படும்.
- அதாவது ஒரே நேரத்தில் நிகழ்த்தப்படும் 100 செயல்களையும் நினைவில் வைத்து அதன் பிறகு கேட்டப்படும் கேள்விக்கு சரியான விடையினை அளிக்க வேண்டும்.
- இவ்வாறு விடை அளித்தலே சதாவதானம் என அழைக்கப்படுகிறது.
- 1907 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 10ம் தேதி சென்னையில் உள்ள விக்டோரியா அரங்கத்தில் அறிஞர்கள் பலர் கூடியிருந்த நிலையில் 100 செயல்களை ஒரே நேரத்தில் செய்து காட்டியதால் சதாவதானி என்று பாராட்டப் பெற்றவர் செய்குத்தம்பி பாவலர் ஆவர்.
Answered by
3
Answer:
சதம் என்றால் நூறு என்பது பொருள்.ஒருவரது புலமையும் நினைவாற்றலையும் நுண்ணறிவையும் சோதிப்பதற்காக ஒரே நேரத்தில் நிகழ்த்தப்படும் 100 செயல்களையும் நினைவில் கொண்டு விடையளித்தலே சதாவதானம் ஆகும்.
Similar questions