கல்விக்கண் திறந்த அவர்களுக்கிடையில் கைவிடப்பட்ட பெண்களுக்காக உழைத்த தமிழகத்தின் முதல் பெண் மருத்துவர் முத்துலட்சுமி பற்றி ஒரு தொகுப்பினை கூறு ?
Answers
Answered by
0
டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி
- டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி 1886 ஆம் ஆண்டு பிறந்தார்.
- இவர் பிறந்த ஊர் புதுக்கோட்டையில் உள்ள திருக்கோகர்ணம் என்பது ஆகும்.
- இவரின் பெற்றோர் நாராயணசாமி, சந்திராம்பாள் ஆவர்.
- பெண்களுக்கு கல்வி மறுக்கப்பட்ட அவர் கல்விக் கற்று தமிழகத்தின் முதல் பெண் மருத்துவராக உயர்ந்தார்.
- இந்திய பெண்கள் சங்கத்தின் முதல் தலைவராகவும், சட்டமன்றத்திற்கு தேர்ந்து எடுக்கப்பட்ட முதல் பெண்மணியாகவும் டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி விளங்கினார்.
- 1926ல் நடந்த அகில இந்திய பெண்கள் மாநாட்டில் பெண்கள் ஆண்களுக்கு நிகராக வாழ வேண்டும்.
- பெண்களை அடிமையாக நடத்தும் முறை ஒழிய வேண்டும் என கூறினார்.
- மேலும் இவர் தேவதாசி ஒழிப்பு முறை, குழந்தை திருமணம், பெண்களுக்கு சொத்துரிமை, இருதார தடைச் சட்டம் முதலியனவற்றிற்காக பாடுபட்டார்.
Similar questions