ஆசிரியர் மாணவனிடம் இப்பாடலின் பொருள் யாது என்று கேட்பது ?
Answers
Answered by
0
அறி வினா
- ஆசிரியர் மாணவனிடம் இப்பாடலின் பொருள் யாது? என்று கேட்பது அறி வினா ஆகும்.
வினா
- விடை அறிய வினவப்படுவது வினா என அழைக்கப்படுகிறது.
- வினா ஆறு வகையாக பிரிக்கப்பட்டு உள்ளது.
- அவை முறையே அறி வினா, அறியா வினா, ஐய வினா, கொளல் வினா, கொடை வினா மற்றும் ஏவல் வினா ஆகும்.
அறி வினா
- தான் விடையினை தெரிந்திருந்தும் பிறருக்கு அந்த விடை தெரியுமா என்பதை அறிய கேட்டப்படும் வினா அறி வினா என அழைக்கப்படுகிறது.
(எ.கா)
- இப்பாடலின் பொருள் யாது? என்று ஆசிரியர் மாணவரை பார்த்து கேட்கும் வினா அறி வினா ஆகும்.
- ஏனெனில் ஆசிரியருக்கு நிச்சயம் அந்த பாடலின் பொருள் தெரியும்.
- அவரை போல மாணவருக்கும் பாடலின் பொருள் தெரிந்துள்ளதா என்பதை அறிய அந்த கேள்வியினை கேட்டார்.
Similar questions
English,
5 months ago
Science,
5 months ago
Math,
5 months ago
India Languages,
10 months ago
Math,
1 year ago