India Languages, asked by Ishu4728, 10 months ago

முயற்சி திருவினை ஆக்கும் முயற்றின்மை இன்மை புகுத்தி விடும் என்ற இக்குறட்பாவில் அமைந்துள்ள பொருள்கோளின் வகையை சுட்டிக்காட்டி விளக்கு ?

Answers

Answered by steffiaspinno
92

பொரு‌ள் கோ‌ள் வகை

  • குற‌ளி‌ல் ஆ‌ற்று ‌நீ‌ர் பொரு‌ள் கோ‌‌ள் இட‌ம்பெ‌ற்று‌ள்ளது.  

ஆ‌ற்று ‌நீ‌ர் பொரு‌ள் கோ‌‌ள்

  • ஒரு செ‌ய்யு‌ளி‌ல் ஆர‌ம்ப‌ம் முத‌‌ல் இறு‌தி வரை ஆ‌ற்று ‌நீ‌ரி‌ன் போ‌க்‌கினை‌ப் போல நேராகவே பொரு‌ள் கொ‌ள்ளுமாறு அமை‌ந்த பொரு‌ள் கோ‌ள் ஆ‌ற்று ‌நீ‌ர் பொரு‌ள் கோ‌‌ள் ஆகு‌ம்.  

உதாரண‌ம்

  • முயற்சி திருவினை ஆக்கும் முயற்றின்மை

        இன்மை புகுத்தி விடும்

‌விள‌க்க‌ம்

  • முய‌ற்‌சி ஒருவரு‌க்கு செ‌‌ல்வ‌த்‌தினை தரு‌ம்.
  • ஆனா‌ல் முய‌ற்‌சி செ‌ய்யாமை ஒருவரு‌க்கு தோ‌ல்‌வியை அ‌ளி‌த்து வறுமை‌யினு‌ள் அவனை த‌ள்‌ளி ‌விடு‌ம் எ‌ன்பது இ‌ந்த குற‌ளி‌ன்  பொரு‌ள் ஆகு‌‌ம்.
  • இ‌ந்த குற‌‌ளி‌ன் பொரு‌ள் ஆர‌ம்ப‌ம் முத‌‌ல் இறு‌தி வரை ஆ‌ற்று ‌நீ‌ரி‌ன் போ‌க்‌கினை‌ப் போல நேராகவே வ‌ந்தா‌ல் இ‌தி‌ல் ஆ‌ற்‌று ‌நீ‌ர் பொரு‌ள் கோ‌ள் இட‌ம்பெ‌ற்று உ‌ள்ளது.  
Answered by deepikamr06
21

Answer:

முயன்றால் முடியாதது ஒன்றுமில்லை என்று சொல்வார்கள். நம்மால் இது நிச்சயம் முடியாது என்று எண்ணும் கடினமான காரியங்களைக்கூட திரும்பத் திரும்ப விடாமுயற்சியுடன் செய்தால் கட்டாயம் வெற்றி அடைய முடியும். அது நமக்கு மேலும் நம்பிக்கையை ஊட்டும்.

ரால்ப் எமர்சன், "எந்தச் செயலைச் செய்வதற்கு விடாமுயற்சி எடுக்கிறோமோ அதனை சாதிக்க முடிகிறது; சாதிக்கிறபோது அந்தச் செயல் ஒன்றும் எளிமையாகி விடவில்லை; நமது முயற்சி அதனை செய்து முடிக்க எளிதாக்குகிறது" என்கிறார்.

எந்தக் காரியமுமே ஆரம்பிக்கும்போது மலைப்பாகத்தான் தோன்றும். குழந்தைகள்கூட நடக்க ஆரம்பிப்பதற்கு முன்னால் விழுந்து எழுந்துதான் நடை பயிலுகின்றன்ன. கீழே விழுகிறோமே என்று அவர்கள் முயற்சிக்காமல் விடுவதில்லை. விடாமுயற்சி மட்டும் இல்லாவிட்டால் பல சாதனைகள் நிகழ்ந்திருக்க மாட்டா.

தாமஸ் ஆல்வா எடிசன் சொல்கிறார், "ஒரு தோல்வி ஏற்பட்டால் மேலே முயற்சி செய்யாமல் இருப்பதுதான் நமது பலவீனமே. இன்னுமொருமுறை முயற்சி செய்து பார்ப்போமே எனும் எண்ணம்தான் வெற்றிக்கு நிச்சயமானவை" என்று.

புத்தகங்களைத் தொடர்ந்து படித்து வந்தால் பல அறிஞர்களின் பொக்கிஷங்களை நம்மால் அறிய முடியும். நாம் எல்லாம் படித்து முடித்துவிட்டோம் என்று எண்ணுவது சுலபம். ஆனால் கற்றது கைம்மண்ணளவுதான் என்று புத்தகச் சுரங்கங்களைத் தோண்டத் தோண்டப் புரியும். ஒவ்வொரு சாதனையாளரும் ஆரம்பத்தில் எவ்வளவு சோதனைகளை சந்தித்திருக்கிறார்கள்! அரசியல், ஆராய்ச்சி, இலக்கியம், இசை என்று எந்தத் துறையிலும் சரித்திரப் புகழ் பெறுவதற்கு முன்னால் எத்தனை முறை தோல்வியைத் தழுவியிருக்கிறார்கள் என்பதும் தெரியும்.

1936ல் தியோடர் சேயஸ் கீசல் எனும் நாவலாசிரியர் ஐரோப்பாவிற்குக் கப்பலில் பயணித்துக் கொண்டிருந்தார். அப்போது கப்பல் எஞ்சின் சத்தத்தின் தாளகதி அவரை ஒரு பாடலை எழுதத் தூண்டியது. அதை அடிப்படையாக வைத்து ஒரு நாவலை எழுதினார். அந்த நாவல் பதிப்பாளர்களால் 27 முறை ஏற்றுக்கொள்ளாமல் திருப்பி அனுப்பப்பட்டது. பலர் இரண்டு மூன்று முறை தோல்வி கிடைத்தபின் இனிமேல் ஒன்றும் செய்ய முடியாது என்று விட்டு விடுவார்கள். ஆனால் 27 முறை தோல்விக்குப் பிறகு அவரது நண்பர் ஒருவர் அவருக்காக அந்த நாவலைப் புத்தகமாக வெளியிட்டார்; வெற்றியும் அடைந்தார். எழுதிய டாக்டர் சேயஸ் 1991ம் ஆண்டு இறந்தார். அதற்குள் அவரது புத்தகம் 200 மில்லியன் பிரதிகள் 15 மொழிகளில் விற்றிருந்தன. அவரது இறப்பிற்குப் பிறகு மேலும் 22 மில்லியன் பிரதிகள் விற்றன.

‘மல்பெரி தெருவில் அதைப் பார்த்தேன் என்று நினைக்கும்போது’ என்ற தலைப்பிலான அந்தப் புத்தகத்தின் கதாபாத்திரங்கள் அனைத்துக் குழந்தைகளின் மனதிலும் குதூகலத்தை ஏற்படுத்தியது. அந்த எழுத்தாளரின் விடாமுயற்சிக்குக் கிடைத்த பரிசு இது.

Similar questions