சீனாவில் மருத்துவமனையில் பயன்படுத்தும் இயந்திர மனிதனின் செயல்பாடுகளை கூறுக ?
Answers
Answered by
0
இயந்திர மனிதனின் செயல்பாடுகள்:
- மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட நோயாளிகளின் அதிக நோயின் காரணமாக அவர்களின் குரலையும், முகத்தையும் அடையாளம் காண முடியவில்லை என தவிக்கும் மருத்துவர்களுக்கு அந்த அடையாளத்தை கண்டுபிடித்து அவர்களுக்கு உதவியாக இருப்பது இந்த இயந்திர மனிதனாகும்.
- அனுமதிக்கப்பட்டிருக்கும் நோயாளிகளுக்கு என்ன நோய் இருக்கிறது என்று அறிந்து கொள்வதோடு மட்டுமல்லாமல் நோய் சம்பந்தப்பட்ட வேறு பல தகவல்களுக்கும் இந்த இயந்திர மனிதன் உதவியாக இருப்பதுண்டு.
- அத்தோடு சீனாவில் உள்ள மொழியின் வெவ்வேறு வட்டார மொழிகளை கூட அவை புரிந்துகொண்டு பதிலளிக்கவும் செய்கின்றனர்.
- இன்னும் நோயாளியின் உருவத்தை அடையாளம் கண்டு அவர்களின் அந்த கேள்விகளுக்கு சரியாக பதிலையும் இவை தருவதுண்டு.
- இவ்வாறு இன்னும் பல வழிகளில் இந்த இயந்திர மனிதன் மருத்துவமனைகளில் செயல்படுகிறான்.
Answered by
0
Explanation:
இயந்திர மனிதன் அல்லது மனித உருக்கொண்ட தானியங்கி (Humanoid robot) என்பது முழுவதும் மனிதனைப் போலவே இருக்கும் தானியங்கி அல்லது எந்திரன் ஆகும். இவை மனிதன் செய்யும் வேலைகளைச் செய்வதற்காக மனிதனால் வடிவமைக்கப்பட்டவை. பொதுவாக இவ்வகை தானியங்கிகள் உடற்பகுதியுடன் கூடிய தலை, இரண்டு கைகள், இரண்டு கால்கள் ஆகியவற்றை கொண்டிருக்கும். மேலும், சிலவகை மனித உருக்கொண்ட தானியங்கிகள் உடற்பகுதியை மட்டும் கொண்டிருக்கும். கண், வாய் போன்றவற்றை முகத்தில் கொண்டுள்ள தானியங்கிகளும் உண்டு. ஆன்ட்ராய்டு எனப்படும் தானியங்கிகள் முழுவதும் மனிதனைப் போலவே இருக்குமாறு செயற்கைத் (SYNTHETIC) தோல் தொழில்நுட்பம் கொண்டு கட்டப்பட்டவை. இவை அறிவியல் ஆராய்ச்சிக்குப் பெரிதும் பயன்படுபவை.
Similar questions