தமிழர் மருத்துவ முறைக்கும் நவீன மருத்துவ முறைக்கும் உள்ள தொடர்பு குறித்து ஒப்படைவு உருவாக்கு
Answers
தமிழர் மருத்துவ முறை
- பழந்தமிழர்கள் இயற்கை உடன் இணைந்த வாழ்வினை வாழ்ந்தனர்.
- அவர்களின் மருத்துவ முறை ஆனது இயற்கை உடன் இணைந்த சித்த மருத்துவம் ஆகும்.
- சித்த மருத்துவத்தில் மருந்துகள் என்பது வேர், இலை, பட்டை, பூ முதலியனவற்றில் இருந்து தயாரிக்கப்படுவது ஆகும்.
- சித்த மருத்துவம் பக்க விளைவுகள் அற்றது.
நவீன மருத்துவ முறை
- நவீன காலத்திய மக்கள் இயற்கையினை சாராமல் இயந்திர வாழ்வினை வாழ்கின்றனர்.
- நவீன மருத்துவ முறை ஆங்கில மருத்துவ முறை அல்லது அல்லோபதி ஆகும்.
- இதில் வழங்கப்படும் மருந்துகள் வேதியியல் முறையில் தயாரிக்கப்பட்டவை.
- நவீன மருத்துவ முறையில் பாதி மருத்துவங்கள் பக்க விளைவுகளை ஏற்படுத்தக் கூடியவை.
Answer:
தமிழர் மருத்துவம்:
தமிழர் மருத்துவமுறை என்பது சித்த மருத்துவம் ஆகும்.
தாவரம், விலங்கு, உலோகம் அதாவது பஞ்சபூதங்கள் எல்லாம் மனித நலனுக்காக பயன்படுவன என்பது சித்த மருத்துவத்தின் கோட்பாடு.
தமிழர்கள் நோயைச் சரிப்படுத்த இயற்கை தரும் இலை, காய், கனிகளிலிருந்தே மருந்தைக் கண்டனர்.
வாதம், பித்தம், சீதம் இவை மூன்றும் சமநிலையில் இருந்தால் நோய் நம்மை நாடாது.
தமிழர் மருத்துவமுறையில் பக்க விளைவுகள் ஏதுமில்லை . குணமாவதற்குச் சில நாட்கள் ஆனாலும் மீண்டும் அந்நோய் நம்மைத் தாக்காது.
நவீன மருத்துவம்:
அறிவியல் வளர்ச்சிக்கு ஏற்ப, மருத்துவத்துறையில் பல்வேறு மாற்றங்கள் ஏற்படுகிறது. அறிவியல் முறையில் சுகமளித்தவர்களில் சிறந்தவர் ஹிப்போகிரேடஸ்.
நவீன மருத்துவ முறையினால் பக்க விளைவுகள் ஏற்படுவதற்குச் சாத்தியக்கூறுகள் உண்டு.
நோய்கிருமிகள் உடனடியாக அழிக்கப்படுகின்றன. நோயைக் குணப்படுத்த முடியாது. ஆனால் இவ்வகை மருத்துவத்துறையில் கவனக்குறைவு ஏற்பட்டால் உயிர் இறுதியாகிவிடும்.
உதாரணமாக, குருதி ஏற்றும்போது தொடர்புடையவரின் குருதி ஒரே இனமாக இருக்க வேண்டும். இவையெல்லாம் பரிசோதனை செய்து நோயாளியைக் குணப்படுத்த வேண்டும்.