India Languages, asked by lewiscook9360, 11 months ago

பொருந்தாத இணையைக் கண்டறிக
அ) வெட்சித்திணை என்பது ஆநிரை கவர்தல் ஆ)கரந்தைத் திணை என்பது ஆநிரை மீட்டல்
இ) வஞ்சித் திணை என்பது மண்ணாசை காரணமாக போர் செய்தல்
ஈ) காஞ்சித்திணை என்பது கோட்டையைக் காத்தல்

Answers

Answered by ashaashley09
0

Explanation:

போர் என்பது பூமியில் போர்

hope it helps

mark me as brainest

Answered by steffiaspinno
0

பொருந்தாத இணை - காஞ்சித்திணை என்பது கோட்டையைக் காத்தல்

வெட்சித்திணை - ஆநிரை கவர்தல்

  • தமிழ் மக்கள் ஆநிரைகளை தங்களின் சொத்துக்களாக கருதினர். ஒரு குழுவிலிருந்து மற்றொரு குழுவிற்கு வெட்சிபூவை சூடி ஆநிரைகள் கவரப்பட்டன.

கரந்தைத்திணை - ஆநிரை மீட்டல்

  • கவர்ந்து சென்றவரிடமிருந்து ஆநிரைகளை மீட்பது கரந்தைத்திணை ஆகும். அப்போது கரந்தை பூவினை சூடிகொள்வர்.

வஞ்சித்திணை - மண்ணாசை காரணமாக போர் செய்தல்

  • மண்ணாசை கருதி பகைநாட்டைக் கைப்பற்ற போரிடப் போகும்போது வஞ்சிபூவை அணிந்து செல்வர்.

காஞ்சித்திணை - நாட்டைக் கைப்பற்ற வந்த அரசனோடு எதிர் நின்று  போரிடல்  

  • தன் நாட்டைக் கைப்பற்ற வந்த அரசனோடு எதிர்த்து நின்று போரிடுவது காஞ்சித்திணை ஆகும். அவ்வாறு போரிடும்போது காஞ்சிபூ சூடிகொள்வர்.
  • எனவே காஞ்சித்திணை கோட்டையைக் காத்தல் என்பது பொருந்தாத இணையாகும்.
Similar questions