India Languages, asked by Bobbyaahana4170, 11 months ago

பொருத்துக
அ) நொச்சித்திணை - கோட்டையைக் கவர கோட்டையை சுற்றி வளைத்தல்
ஆ) உழிஞைத்திணை - கோட்டையைக் காத்தல் வேண்டி உள்ளிருந்து போரிடல்
இ) தும்பைத்திணை - இருபெரு வேந்தரும் வீரர்களும் ஒருவரோடொருவர் போரிடுவது
ஈ) வாகைத்திணை - போரில் வெற்றி

Answers

Answered by kkulothungan3
0

Answer:

நொச்சித் திணை என்பது கோட்டையை காதல் வேண்டி உள்ளிருந்து போரிடுதல்

உழிஞை திணை என்பது கோட்டையை கவர கோட்டையை சுற்றி வளைத்தல்

தும்பைத் திணை என்பது இரு பெரு வேந்தரும் வீரர்களும் ஒருவரோடு ஒருவர் போரிடுதல்

வாகை திணை என்பது போரிலே வென்ற மன்னன் வெற்றி வாகை சூடுதல்

Answered by steffiaspinno
1

நொச்சித்திணை - கோட்டையைக் காத்தல் வேண்டி உள்ளிருந்து போரிடல்  

  • மண்ணை காக்க கோட்டைகள் பல கட்டப்பட்டன. தனது நாட்டின் கோட்டையை கைப்பற்ற வந்த பகையரசனோடு கோட்டையைக் காத்தல் வேண்டி நொச்சிபூவினை சூடிக்கொண்டு உள்ளிருந்து போரிடுதல் நொச்சித்திணை ஆகும்.

உழிஞைத்திணை - கோட்டையைக் கவர கோட்டையை சுற்றி வளைத்தல்  

  • மாற்றரசரின் கோட்டையைக் கவர கோட்டையை சுற்றி வளைத்தல் உழிஞைத்திணை ஆகும்.
  • அப்போது வீரர்கள் உழிஞைபூவினை சூடிக்கொண்டு போரிடுவர்.

தும்பைத்திணை - இருபெரு வேந்தரும் வீரர்களும் ஒருவரோடொருவர் போரிடுவது  

  • பகைவேந்தர்கள் இருவரும் வலிமையே பெரியது என்பதை நிலைநாட்ட  தும்பை பூவினை சூடிக்கொண்டு ஒருவரோடொருவர் போரிடுவது தும்பைத்திணை ஆகும்.

வாகைத்திணை - போரில் வெற்றி

  • போரிடும்போது வெற்றி பெற்ற மன்னன் வாகைப்பூ சூடிகொள்வது வாகைத்திணை  ஆகும்.
Similar questions