சங்க காலப் போர் அறம் குறித்து எழுதுக?
Answers
Answered by
6
சங்க காலப் போர் அறம்:
- சாதி,மொழி,மதம்,இனம் ஆகியவற்றை கருத்தில் கொள்ளாமல் அறமே உன்னதமானது என்னும் எண்ணம் கொண்டவர்கள் சங்ககால தமிழ் மக்கள்.
- மக்கள் இல்வாழ்க்கையை அறவாழ்கையாக வாழ்ந்து வந்தனர்.
- அறமானது ஒரு மனிதருக்கும் மற்றொரு மனிதருக்கும் இடையே உள்ள உறவினை மேம்படுத்துகிறது.
- பிறரிடம் எந்த உதவியும் எதிர்பார்க்காமல் உதவி செய்வதே மேன்மை தரும் அறமாகும்.
போர் அறம்
- போர் செய்யும்போதும் அறநெறி உடையவர்களாய் இருத்தல் வேண்டும். அதாவது சிறார், முதியோர், குழந்தைகளுக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படுத்தாத வகையில் போரிடுதல் வேண்டும்.
- தன்னை விட வலிமை குறைந்தவரோடு போரிடுவது அறமாகாது என்று ஆவூர் மூலங்கிழார் கூறியுள்ளார்.
- போரிடும்போது அங்குள்ள பசுக்கள், பெண்கள், நோயாளிகள், புதல்வரை பெறாதோர் ஆகியோருக்கு பாதிப்பு ஏற்படாதவாறு நடந்து கொள்ளுதல் வேண்டும்.
Similar questions
Science,
5 months ago
Math,
5 months ago
Business Studies,
5 months ago
India Languages,
11 months ago
India Languages,
11 months ago
English,
1 year ago