India Languages, asked by Mohitkhan2616, 11 months ago

பொருத்துக
அ)தற்குறிப்பேற்ற அணி - ஒரு சொல் பல இடங்களில் உள்ள சொற்களோடு பொருள் கொள்ளல்
ஆ)தீவக அணி - சொல்லையும் பொருளையும் வரிசையாக நிறுத்திப் பொருள் கொள்ளல்
இ) நிரல்நிறை அணி - உண்மையான இயல்புத் தன்மை
ஈ) தன்மையணி - கவிஞனின் பொறுப்பேற்றல்

Answers

Answered by kkulothungan3
2

Answer:

தற்குறிப்பேற்ற அணி என்பது கவிஞனின் பொறுப்பேற்றல்

தீவக அணி என்பது ஒரு சொல் பல இடங்களில் உள்ள சொற்களோடு பொருள் கொள்ளல்

நிரல்நிறை அணி என்பது சொல்லையும் பொருளையும் வரிசையாக நிறுத்தி பொருள் கொள்ளல்

தன்மையணி என்பது உண்மையான இயல்பு தன்மையை கூறுதல்

Answered by steffiaspinno
1

பொருத்துக :

அ)தற்குறிப்பேற்ற அணி - கவிஞனின் பொறுப்பேற்றல்

  • இயல்பாய் நடக்க்கூடிய நிகழ்ச்சியின் மீது கவிஞன் தன் குறிப்பைஏற்றிக் கூறுவது தற்குறிப்பேற்ற அணி எனப்படும்.  

ஆ)தீவக அணி -  ஒரு சொல் பல இடங்களில் உள்ள சொற்களோடு பொருள் கொள்ளல்

  • தீவக அணி என்பது செய்யுளின் ஓரிடத்தில் நின்ற ஒரு சொல் அச்செய்யுளின் பல இடங்களிலும் உள்ள சொற்களோடு சென்று பொருந்திப் பொருளை விளக்குவதாகும்.  

இ) நிரல்நிறை அணி - சொல்லையும் பொருளையும் வரிசையாக நிறுத்திப் பொருள் கொள்ளல்

  • நிரல்நிறை அணி என்பது ஒரு சொய்யுளில் உள்ள சொல்லையும் பொருளையும் மாற்றாமல் அவ்வரிசைப்படியே இணைத்துப் பொருள் கொள்வதாகும்.

ஈ) தன்மையணி - உண்மையான இயல்புத் தன்மை

  • தன்மையணி என்பது எந்த வகையான பொருளாக இருந்தாலும் கேட்பவர்களின் மனம் மகிழுமாறு இயற்கையாக அமைந்த அதன் உண்மையான இயல்புத் தன்மையினை உரிய சொற்களை அமைத்துப் பாடுவதாகும்.
Similar questions