கவிஞர் தாம் கூற விரும்பும் கருத்திற்கு என்றவாறு தற்குறிப்பேற்ற அணி அமைவதே எடுத்துக்காட்டுக
Answers
Answered by
9
Explanation:
This is the answer to the question
Attachments:
Answered by
6
தற்குறிப்பேற்ற அணி :
- இயல்பாய் நடக்ககூடிய நிகழ்ச்சியின் மீது கவிஞன் தன் குறிப்பை ஏற்றிக் கூறுவது தற்குறிப்பேற்ற அணி எனப்படும்.
எ.கா.
‘போருழந் தெடுத்த ஆரெயில் நெடுங்கொடி
‘வாரல்’ என்பன போல் மறித்துக் கைகாட்ட’
பாடலின் பொருள் :
- கோட்டையின் மதில் மேல் கட்டப்பட்டிருந்த கொடியானது யாரும் வரவேண்டாம் எனத் தடுப்பது போல, கை அசைத்து காட்டியது என்பது பொருளாகும் .
அணிப்பொருத்தம் :
- கோவலன், கண்ணகி இருவரும் மதுரை மாநகருக்குள் சென்றனர் அப்போது மதிலின் மேல் கட்டப்பட்டிருந்த கொடிகள் காற்றில் இயற்கையாக அசைந்தன.
- ஆனால், சிலப்பதிகாரத்தின் ஆசிரியரான இளங்கோவடிகள் கோவலன் மதுரையில் கொலை செய்யப்படுவான் எனும் செய்தியை முன்பே அறிந்துக் கொண்ட அக்கொடிகள் கையை அசைத்து, ‘இம்மதுரைக்குள் வர வேண்டா’ என்று தெரிவிப்பது போலக் காற்றில் அசைவதாகத் தம் குறிப்பைக் கொடியின் மீது இளங்கோவடிகள் ஏற்றிக் கூறுகிறார்.
Similar questions